பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


போகிறவர்கள் போல்தான் தெரிந்தது. ஆனால் தொண்டைமானாற்றுக் கழிமுகத்தையும் மா தோட்டத்தையும், விட்டுவிட்டு ஏன் அவர்கள் தெற்கே வந்தார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை!” - அந்த, ஆட்கள் தன் மேல் வேல் எறிந்து துரத்திக் கொல்ல முயன்றதையும் , அப்போது மதிவதனி தன்னைக் காப்பாற்றியதையும் மட்டும் அவரிடம் இராசசிம்மன் கூறவில்லை.

“அது சோழ நாட்டுக் கப்பலானால் அப்படிச் சுற்றி வளைத்து வந்தது ஆச்சரியந்தான். ஒருவேளை அவர்களுக்கு விழிஞத்தில் ஏதாவது காரியம் இருந்திருக்கும்; அதை முடித்துக்கொண்டு இலங்கை வருவதற்குப் புறப்பட்டிருப் பார்கள். அப்படி அந்தக் கப்பல் இலங்கை வருவதாயிருந்தால் நம் கப்பலுக்குப் பின்னால்தானே வரவேண்டும்? அப்படியும் காணவில்லையே!” என்று சந்தேகத்தோடு பதில் சொன்னார் சக்கசேனாபதி. ... •

“நாகைப்பட்டினத்துக்கே திரும்பி விட்டார்களோ, என்னவோ? அப்படியானாலும் நம் கப்பல் செல்லும் திசையிலேயே வந்துதானே வடமேற்கு முகமாகத் திரும்ப வேண்டும்?” என்று மீண்டும் கேட்டான் இராசசிம்மன்.

‘யாரோ! என்ன காரியத்துக்காக வந்தார்களோ ? ஒருவேளை கீழ்க்கரையை ஒட்டிப் பாம்பனாறு வழியாகவும் போயிருக்கலாம். நீங்கள் சொல்வதையெல்லாம் சிந்தித்தால் எனக்குப் பல வகைகளில் சந்தேகங்கள் ஏற்படுகின்றன இளவரசே! இப்படி ஒரு கப்பலைப் பார்தேன் என்று நீங்கள் அன்றே செம்பவழத் தீவில் என்னிடம் கூறியிருக்கலாமே! தாங்கள் கூறாமல் மறைத்துவிட்டது ஏனோ?” சக்கசேனாபதி சற்றே சினந்துகொள்வது போன்ற குரலுடன் இவ்வாறு கேட்டபோது இராசசிம்மன் விழித்தான்.

“சரி! அவர்கள் பேச்சு நமக்கு எதற்கு? அந்தக் கப்பல் எக்கேடுகெட்டுவேண்டுமானால் போகட்டும். நாம் நம்முடைய காரியத்தைக் கவனிப்போம். நீங்கள் கூறுகிறபடி புத்தளத்திலேயே இறங்கிவிடலாம்” என்று பேச்சை மாற்றினான் இராசசிம்மன்.