பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

551


காக்கவில்லை. ஆகவே அவர்கள் படை வலிமையால் மதுரையையும் கடந்த வந்து நம்மை எதிர்த்தாலும் அதைச் சமாளிக்க நாம் தயாராகத்தான் இருக்கவேண்டும்” என்று சோழன் மீண்டும் வற்புறுத்தினான். -

எல்லோரும் தம் படைகளைக் கொடும்பாளுருக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்டனர். உடனே அரண்மனை நிமித்தக்காரரை வரவழைப் படை கொண்டுவருவதழ்கு நல்ல நாளும், கோளும், வேளையும் குறித்துக்கொண்டனர் அவர்கள் ஐவரும். எல்லாப் படைகளும் வந்து தங்குவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்யுமாறு சோழன் கொடும்பாளூர் மன்னனை வேண்டிக்கொண்டான்.

எப்படியும் சில வாரங்கள் அல்லது சில தினங்களுக்குள் படையெடுப்பை ஆரம்பித்துவிட வேண்டு மென்று உறுதி செய்துகொண்டனர். இரண்டு மண்டலக் காலம் என்று காலத்தை எல்லை கட்டி வரையறுத்தான் கண்டன் அமுதன். இரண்டு பிரிவாகப் பிரிந்து தென் திசை செல்லும் படைகளுக்கு அரசூருடையானும், பரதுாருடை யானும் தளபதிகளாக இருக்கவேண்டுமென்று மற்ற மூவரும் வேண்டிக் கொண்டனர். அவர்களும் மறுக்காமல் ஒப்புக் கொண்டார்கள். - -

“நம் படையெடுப்பில் வெற்றி கிடைக்கும் என்பதற்கு எடுத்த எடுப்பிலேயே நமக்கு நல்ல சகுனந்தான் கிடைத்திருக்கிறது. நம்முடைய கழு மரம் போர் தொடங்கு முன்பே தென்பாண்டி நாட்டு வீரனொருவனைப் பலி வாங்கிவிட்டது!” என்று சொல்லிச் சிரித்தான் கொடும்பாளூர்

“இந்த ஒரு பலி மட்டும் போதாது, இன்னும் எத்தனை தென் பாண்டி நாட்டு ஒற்றர்கள் சிக்கினாலும் உங்கள் கழுமரத்துக்குப் பலி கொடுக்கலாமே!” என்றான் அரசூருடையான். -

“படையெடுப்புத் தொடங்குவதற்கு முன் தெற்கே திரியும் நம் ஆட்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை இங்கே