பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

557


தெரிந்துவிடும்” என்று கழற்கால் மாறனார் சொன்னபோது, வேறு வழியின்றி ஒப்புக் கொள்ளுகிறார்போல் அந்த மூன்று பேருடைய தலைகளும் மெல்ல அசைந்தன.

அன்று பொன்மனைக் கூற்றத் தலைவர் மாளிகையில் மற்ற மூன்று கூற்றத் தலைவர்களுக்கும் பிரமாதமான விருந்து உபசாரம் நடைபெற்றது. நால்வகை உண்டிகளும், அறுசுவைப் பண்டங்களும், முக்கனிகளுமாக அப் பெருவிருந்தை உண்ட போது மற்ற மூன்று கூற்றத் தலைவர்களுக்கும் அந்த வயதான மனிதர்மேல் நன்றி சுரக்கத்தான் செய்தது. அவ்வளவு உபசாரங்களைச் செய்கிறவருக்காக நன்றியோடு உழைக்க வேண்டுமென்ற ஆவலும் எழுவது இயற்கைதானே? கழற்கால் மாறனாரைச் சில நாட்களாவது மகாமண்டல்ேசுவரர் பதவியில் இருக்கச் செய்து பார்க்க ஆசைப்பட்டார்கள் அவர்கள்.

அந்தக் கூட்டம் நடந்த சில தினங்களுக்குப்பின் சூரியோதயத்துக்கு முன் நாய்கள் குரைப்பதுபோல், ஒவ்வொரு கூற்றத்திலும் மக்கள் மதிப்புக்குரியவராயிருந்த மகாமண்டேலசுவரரைப் பற்றிக் குறும்புத்தனமான கெடுதல் பிரசாரங்கள் இரகசியமாக ஆரம்பமாயின.


37. காலப் பெருவெளியிற் சில கனவுப் பறவைகள்

எதிலும் மனம் பொருந்தாமல், எண்ணங்கள் ஒட்டாமல் அந்த அரண்மனைக்குள் அதே நிலையில் நாட்களைக் கடத்த முடியாது போல் தோன்றியது மகாராணி வானவன்மா தேவிக்கு. நான்கு புறமும் நீந்தி மீளமுடியாதபடி பொங்கிப் பெருகும் வெள்ளப் பிரவாகத்தினிடையே அகப்பட்டுக் கொண்ட நீந்தத் தெரியாத மனிதனைப்போல் சிறுமை நிறைந்த சாமானிய மனிதக் குணங்களுக்கு நடுவே திகைத்து நின்றார் அவர். அதுவும் கழற்கால் மாறனார் ஒப்புரவு மொழி மாறா ஒலையோடு வந்து பயமுறுத்திவிட்டுப் போனதிலிருந்து