பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

559


கோட்டாற்றிலிருந்து அந்தச் சமணப் பண்டிதர்கள் தங்களைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தாள்.

“அவர்களையும் இங்கேயே நந்தவனத்துக்கு அழ்ைத்துக் கொண்டு வா, அம்மா!” என்றார் மகாராணி, பணிப்பெண் போய் அழைத்துக்கொண்டு வந்தாள்.

“அடிகளே, வாருங்கள்! பயிர் வாடுகிறபோதெல்லாம் தானாகவே வந்து பெய்கிற மழை மாதிரி வெளியே சொல்ல முடியாத ஊமைக் கவலைகளால் நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற சமயங்களிலெல்லாம் நீங்கள் காட்சியளித்து எனக்கு நம்பிக்கையளிக்கிறீர்கள்” என்று அவர்களை வரவேற்றார் மகாராணி, - -

“துன்பத்தைப் போக்குவதற்கு நான் யார் தாயே? உலகில் பிறந்து வாழ்வதே பெருந் துன்பம். நடக்கத் தெரிகிறவரை எழுவதும் விழுவதுமாகத் தள்ளாடும் குழந்தை போலப் பிறவியை வென்று வீடடையப் பழகுகிற வரையில், பிறப்பும் வாழ்வும் துன்பங்களே தரும்.

பிறந்தோர் உறுவது பெருகி துன்பம் பிறவார் உறுவது பெரும் பேரின்பம் பற்றின் வருவது முன்னது, பின்னது அற்றோர் உறுவது.’ - என்று புலவர் சீத்தலைச்சாத்தனார் மணிமேகலைக் காப்பியத்தில் எவ்வளவு அழகாக இந்தத் தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார்!” என்று சொல்லிக்கொண்டே, உடன் வந்த மற்றொரு துறவியோடு புல்தரையில் உட்கார்ந்தார் கோட்டாற்றுப் பண்டிதர். மகாராணியும், புவனமோகினியும் அதே புல்தரையில் சிறிது தூரம் தள்ளி அடக்க ஒடுக்கமாக அமர்ந்து கொண்டனர். - . . . . .”

“அந்தப்புரத்துக் கட்டடங்களுக்குள்ளேயே அடைந்து கிடக்கப் பொறுக்காமல் நந்தவனத்துக்கு வந்தேன். அடிகளே ! நல்லவேளையாக நீங்களும் வந்தீர்கள். இன்று உங்களைக் காணும் பேறு கிட்டுமென்று நான் கனவிலும் எதிர்பார்க்க வில்லை.”