பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

571


பாடிய கவிதையோ உங்கள் நாவன்மையையும் எனக்குப் புரியவைத்துவிட்டது. உங்கள் கவித்திறனைப் பற்றி இதுவரை காசிப மன்னருக்குத் தெரியாது. தெரிந்தால் மிகவும் பெருமைப்படுவார்.” -

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே கப்பல் முழுமையாக நங்கூரம் பாய்ச்சப்பட்டுக் கரையை அணுகியிருந்தது.

‘இங்கிருந்து அனுராதபுரம் வரையில் நாம் குதிரையில்தான் போகவேண்டும். கடற்காய்ச்சலோடு உங்களால் குதிரைப் பயணம் செய்ய முடியுமா என்றுதான் தயங்குகிறேன்’ என்று கூறி, அருகில் நெருங்கிக் குமாரபாண்டியனின் நெற்றியையும் மார்பையும் தொட்டுப் பார்த்தார், சக்கசேனாபதி. %。

“அது ஒன்றும் எனக்கு அவ்வளவு சிரமமான காரிய மில்லை. பசுமையும், வனப்பும் குளிர்ச்சியும் நிறைந்த இந்தக் காட்டு வழியில் பயணம் செய்யும்போது கடற்காய்ச்சலையே மறந்துவிடுவேன் நான். உங்கள் நாட்டின் வனங்களில் வழிநெடுகப் பெளத்த ஆலயங்களும், பிட்சுக்களின் சாது சங்கங்களும் நிறைய இருக்குமே. அன்புள்ள இடங்களும், அன்பு நிறைந்த மனிதர்களும் இருக்கும்போது துன்பங்களை யாராவது பொருட்படுத்துவார்களா?”

“அப்படியானால் இறங்கிவாருங்கள். அதோ குதிரைகளை வைத்துக்கொண்டு நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். நாம் போகலாம்.” - -

“நாம் போவது சரி, கப்பல் அறைக்குள் இருக்கும் பாண்டி நாட்டின் அரசுரிமைப் பொருள்களை முதலில் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமென்பதை மறந்து விட்டீர்களா?” -

“அதைப்பற்றித் தங்களுக்குக் கவலையே வேண்டாம் இளவரசே! கப்பல் ஊழியர்களும், நம்மை வரவேற்க வந்திருக்கும் ஈழ நாட்டு வீரர்களும் அவற்றைப் பாதுகாப்பாக