பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

575


வழிகள் மறந்து போகக்கூடிய காடு அது கொஞ்சம் வழிதவறி, இடம் தவறி நடுக்காட்டில் போய் மாட்டிக்கொண்டால் கூட்டம் கூட்டமாகத் திரியும் யானை மந்தைகளிடம் சிக்கித் திண்டாட வேண்டியதுதான்.

“இளவரசே! இருட்டுகிற சமயத்தில் எந்த ஊர் வருகிறதோ அங்கே தங்கிவிட்டு, மறுபடியும் காலையில் பயணத்தைத் தொடங்கி அரசருடைய வெள்ளணி விழாவுக்கு அனுராதபுரம் போய்விடுவோம். இந்தக் காடுகளில் இரவுப் பயணம் ஆபத்தானது !’ என்றார் சக்கசேனாபதி. குமாரபாண்டியன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. “கண்ட இடங்களில் தங்கித் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு கிடப்பதைவிட இரவிலும் பயணம் செய்தால் சற்று முன்பாகவே போய் அரசருடைய நாண்மங்கலத்தில் கலந்துகொண்டு வெள்ளணிக் கோலத்தில் அவரைக் கண்டு மகிழலாம்” என்றான் அவன்.

‘இரவிலும் தங்கி விடிவதற்கு ஐந்து நாழிகை இருக்கும்போது புறப்பட்டாலும் விழாவுக்கு நாம் போய் விடமுடியும். இந்தப் பக்கத்துக் காடுகளின் நிலவரத்தை நன்கு தெரிந்து கொண்டு நான் சொல்கிறேன். என் வார்த்தையைத் தட்டாதீர்கள். இரவுப் பயணத்துக்கு இந்தக் காடு ஏற்றதில்லை” என்று மீண்டும் இராசசிம்மனைக் கெஞ்சினார் அவர். அவனோ இரவே போகவேண்டும் என்று பிடிவாதமாக ஒற்றைக் காலில் நின்றான். -

அப்போது மாலை மயங்குகிற நேரம் ஆகியிருந்தது. ஆதிபுரம் என்ற ஊரைக் கடந்து வடகிழக்காக அனுராத புரத்துக்குச் செல்லும் காட்டுப் பாதையில் அவர்களுடைய குதிரைகள் சென்றுகொண்டிருந்தன. அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்த பகுதி மிக மிக அடர்ந்த பயங்கரமான வனப் பகுதி. நாகராகப் பெருவனம் என்று வழங்கும் அந்த இருண்ட காட்டில் அவர்கள் புகுந்தபோது கதிரவன் மறைந்தான். ஏற்கெனவே இருந்த இருள் பெருகிக் கனத்தது. குமாரபாண்டியனின் பிடிவாதத்தை எண்ணி, மனம் வருந்திய சக்கசேனாபதி, “கருணை நிறைந்த எங்கள் புத்தர்