பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


ஆனால் சக்கசேனாபதி அந்த நினைவுகளை வளர விடவில்லை. “நாளைக்கு அதிகாலையில் நாமிருவருமே தமனன் தோட்டத்துக்குப் போய்ப் பார்க்கலாம். நீங்கள் செம்பவழத் தீவில் கண்ட எதிரிகளின் கப்பலாக இருந்தால் அதிலிருப்பவர்களைக் கீழிறக்கி விசாரிக்கிற முறைப்படி விசாரிப்போம்” என்று கூறினார் அவர். அப்போது அவர்களுடன் அங்கிருந்த கனகமாலை “சேனாபதித் தாத்தா! நானும் நாளைக்கு உங்களோடு தமனன் தோட்டத்துக்கு வரப் போகிறேன். நீங்கள் மறுப்புச் சொல்லாமல் என்னையும் கூட்டிக் கொண்டு போகவேண்டும்!” என்று பிடிவாதம் பிடித்தாள்.

“ஐயோ, நீ கூடவருகிற சந்தர்ப்பமில்லை அம்மா இது! நாங்கள் ஒரு முக்கியமான காரியமாகப் போய்விட்டுத் திரும்பி விடுவோம்” என்று சேனாபதி அந்தப் பெண்ணின் விருப்பத்தை மறுத்தார். பின்பு சக்கசேனாபதியும் குமாரபாண்டியனும் காசிப மன்னரிடம் போய்ச் சொல்லிக் கொண்டார்கள்.

“இப்படி ஒரு கப்பல் உங்களை இரகசியமாகத் தொடர்ந்து பின்பற்றி வந்ததென்ற விவரத்தை இங்கு வந்ததுமே நீங்கள் என்னிடம் சொல்லியிருக்கலாமே! சொல்லாததனாலும் பரவாயில்லை. இப்போது உடனே போய் அந்தக் கப்பலைக் கவனியுங்கள். அதிலிருப்பவர்கள் குமாரபாண்டியனின் எதிரிகள் என்று சந்தேகப்படுகிறதற்கு ஏற்றவர்களாயிருந்தால் அவர்களைச் சிறைப்பிடித்து இங்கேயே கொண்டு வாருங்கள்” என்று கூறி, அவர்களுக்கு விடைகொடுத்தார் ஈழ நாட்டு மன்னர். பயணம் தொடங்குவதற்கு முன் நினைவாகத் தன் வலம்புரிச் சங்கை உடனெடுத்துக் கொண்டான் இராசசிம்மன்.

வைகறை மெல்லிருள் விலகுவதற்குமுன் அவர்கள் இருவரும் பொலன்னறுவையிலிருந்து புறப்பட்டார்கள். என்று மில்லாதபடி அவர்களுக்கென்றே வாய்த்ததுபோல் அன்றைக்கு இயற்கைச் சூழ்நிலை மிக அற்புதமாக இருந்தது.மெல்லச் சுழன்று வீசும் குளிர்ந்த காற்றுடனே ஊசி ஒழுகுவதுபோல சாரல் பெய்துகொண்டிருந்தது. வானம் பிறந்த மேனியாய்த் தனது நீலநிறத்தைத் திறந்து காட்டிக் கொண்டிராதபடி, மேகச் சுருள்கள் திட்டுத் திட்டாக அடைந்திருந்தன. எல்லோருடைய