பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


மகாமண்டலேசுவரரும், என் அன்னையும், தளபதியும் சிந்தனை குன்றியவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. நான் அங்கில்லையென்றால் இங்கேதான் இருப்பேனென்று அவர்கள் மிக எளிதாகத் தெரிந்துகொள்ளுவார்கள்” என்று இராசசிம்மன் கூறியபோது சக்கசேனாபதி அதைக் கவனித்துக் காதில் வாங்கிக் கொள்ளாமல், கலக்கம் நிறைந்த பார்வையால் வாணவெளியை நிமிர்ந்து பார்த்தார். “இன்றைக்கு நம்முடைய பயணம் நடுவழியில் எங்கேயாவது தடைப்படத்தான் போகிறது. வானம் இருக்கிற சீரைப் பார்த்தால் தன் ஆத்திரத்தை யெல்லாம் கொட்டித் தீர்த்துக் கொள்ளப்போகிற மாதிரி இருக்கிறது” என்று கவலை நிறைந்த குரலில் கூறினார். “மழை வருவதாயிருந்தால் அதைத் தடுப்பதற்கு நாம் யார்? ஈழ நாட்டுப் படைத் தலைவரும், பாண்டி நாட்டு இளவரசனும் பயணம் செய்கிறார்களென்றால் மழைக.ட அவர்களுக்குப் பயப்படவேண்டுமென்கிற அவசியம் உண்டா?” என்று சற்றே வேடிக்கையாகச் சக்கசேனாபதியை நோக்கிச் சொன்னான் குமாரபாண்டியன். கவலை நிழல் படியத் தொடங்கியிருந்த அவர் முகத்தில் அவனுடைய வேடிக்கைப் பேச்சு சிரிப்பையோ, மலர்ச்சியையோ உண்டாக்கவில்லை.

சூரிய ஒளியே உறைக்காத மேக மூட்டம் உச்சிப் போது கழிந்து சில நாழிகைகளான பின்னும் நீடித்தது. அதனால் அந்திக்கு இன்னும் நெடுநேரம் மீதமிருந்தபோதும் அப்போது இருளத் தொடங்கிவிட்டது போன்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இரவு நேரத்தில் தங்குவதற்குப் பாதுகாப்பான இடத்தை அடைந்துவிட்டால் மழையைப் பற்றிக் கவலைப்பட வேண்டியிராதென்று சக்கசேனாபதி நினைத்திருந்தார்.

ஆனால் மழை அவருடைய நினைவை முந்திக்கொண்டு வந்துவிட்டது. தனி மழையாக வரவில்லை. பயங்கரமான காற்றும், மழையும் ஒன்றுசேர்ந்துகொண்டன. அந்தச் சமயத்தில் நடுக்காட்டில் கடல்போலப் பரந்து தேங்கிக் கிடந்த ஓர் ஏரியை ஒட்டி அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். தண்ணிரைப் பாளம் பாளமாக யாரோ சீவி எறிவதுபோல் அலைமோதியது. ஏரியில் நான்கு புறமும் காது செவிடுபடுகிறாற் போல் ஒரே பிரளயப் பேரொலியில் மூழ்கிவிட்டனவா? காற்றுக்