பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

609


கடவுளுக்கும் மழைக் கடவுளுக்கும் போர் மூண்டு விட்டதா? இடி ஓசையும் காட்டு மரங்கள் முறிந்து விழும் ஒசையும், காற்றொலியிலும் மழை ஒலியிலும் கலந்து சிறிதாகி ஒலித்தன. ஊழிக் காற்று, ஊழி மழை என்றெல்லாம் சொல்லுவார்களே அவையிரண்டும் ஒரே சமயத்தில் ஊழி எல்லைய்ைக் காண ஆசைப்பட்டு விட்டவை போலக் கிளர்ந்து எழுந்து விட்டன என்று சொல்லத்தக்க நிலை. -

ஏரியின் இக்கரையில் அவர்களுடைய வழிமேல் ஒரு பெளத்தப் பள்ளியும், அருகில் உயரமான பெரிய புத்தர் சிலையும் தெரிந்தன.

“இளவரசே! வேறு வழியில்லை. இங்கே தங்கிவிட வேண்டியதுதான். இந்த இடம் ஏரி நீர்ப்பரப்பைக் காட்டிலும் மேட்டுப் பாங்கானது. இதே வழி போகப் போக தாழ்ந்து பள்ளமான நிலத்தில் செல்கிறது. இந்தக் காற்றிலும், மழையிலும் எப்படி ஆகுமோ? இப்படியே தங்குவதுதான் நல்லது” என்றார் சக்கசேனாபதி, e - . . . -

இந்தத் தீர்மானத்துக்கு வருவதற்குள் அவர்கள் இருவருடைய உடல்களும் தெப்பமாக நனைந்துவிட்டன. இருவரும் தங்கள் குதிரைகளை விரட்டிக்கொண்டு போய் அந்தப் பெளத்தப் பள்ளிக்கு முன்பாக நிறுத்தினார்கள். ஆள் பழக்கமில்லாத காரணத்தால் கட்டடம் இருண்டு பாழடைந்திருந்தது. - -

“மழைக்கும் புயலுக்கும் பயந்துகொண்டு நடு வழியில் தங்கி நாம் ஆற அமரப் போய்ச் சேருவதற்குள் தமனன் தோட்டத்தில் பிடிபட்ட கப்பலும் ஆட்களும் தப்பிப் போனால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று சொல்லிக் கொண்டே குதிரையிலிருந்து இறங்கிக் கட்டடத்துக்குள் நுழைந்தான் குமாரபாண்டியன். . . . . - - o

“அப்படித் தப்பவிட்டு விடுவதற்கு ஈழ நாட்டுக் கடற்படை வீரர்கள் முட்டாள்கள் அல்லர்” என்று பதில் கூறிக் கொண்டே அவனைப் பின்பற்றி உள்ளே சென்றார் சக்கசேனாபதி. -

ஈர ஆடையோடு சோர்ந்து போய் ஓரிடத்தில் உட்காரு வதற்காகக் குனிந்த குமாரபாண்டியன் ஒருவிதமாகப் பயங்

பா. தே.39