பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

615


முழுமையான வாழ்வு என்று அரசியல் அறம் சொல்லலாம். அப்படிச் சொல்லுவது இதற்கு இலக்கணமாக இருக்கலாம். ஆனால் அது மட்டும் எனக்கு முழுமையான வாழ்வாகத் தோன்றவில்லையே? முழுமையாவது மண்ணாங்கட்டியாவது! அரசனாகப் பிறந்தாலென்ன ? ஆண்டியாகத் தோன்றினாலென்ன? பிறப்பது மண்ணில்தானே? வாழ்வதும் மனிதனாகத்தானே! மனிதனுடைய வாழ்க்கை; அது ஒரு ஒட்டைப் பானை. ஒரு பக்கம் முழுமை கண்டால் இன்னொரு பக்கமாக ஒழுகி விடுகிறதே! ஒன்றை நிறைவாக அனுபவித்தால் இன்னொன்றை இழக்கவேண்டியதுதான். நிறைவு, முழுமை யெல்லாம் அமர வாழ்க்கையில்தான் உண்டு போலிருக்கிறது. தேனிக்களை விரட்டாமல் தேனடையிலுள்ள தேனைக் குடிக்க முடியுமா? வாழ்விலுள்ள துன்பங்களைப் போக்காமல், குறைகளை நீக்காமல் முழுமையும் நிறைவும் காண்பது எங்கே? ‘அறத்தையும், அன்பையும், கருணையையும் கொண்டே வாழ்ந்துவிட என் தாய்க்கு ஆசை. அறிவையும், சூழ்ச்சியையும் கொண்டே வாழ்ந்துவிட மாகமண்டலேசுவரருக்கு ஆசை, படைகளையும் போர்க்களங்களையும், உடல் வன்மையையும் கொண்டே வாழ்ந்துவிட வல்லாளதேவனுக்கு ஆசை. இந்த ஆசைகள்தான் முழுமையான வாழ்வா? குழல்வாய்மொழி என்ற பெண்ணுக்குக் கூட என்னையும் எனது அரசபோக ஆடம்பரங்களையும் தனதாக்கிக்கொள்ளும் ஆசையிருக்கிறது. என்னுடைய பதவியும், பெருமையும், தகுதியும் தெரியாமலே என்மேல் அன்பு செலுத்தவும் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு என்மேல் இருக்கும் அன்போ எனக்கு அவள் மேலிருக்கும் அன்போதான் முழுமையானதா?

எது முழுமை? எது நிறைவு? அழியாதது எது? பரிபூரண மான வாழ்வு எது? என்னைப்போன்று பெரிய அரச மரபின் வழித்தோன்றலாக வந்த ஓர் இளைஞனுக்கு அது எப்படிக் கிடைக்கும்? என்று இப்படி உருக்கமான பல நினைவுகளை மனத்தில் அசைபோட்டுக் கொண்டிருந்தான் இராசசிம்மன்.

பொழுது விடிவதற்குச் சிறிது நேரத்துக்குமுன் சக்கசேனாபதியும் புத்தபிட்சுவும் தூக்கம் விழித்து எழுந்திருந்த போது வாசற்படியில் சாய்ந்து உட்கார்ந்தவாறே இராசசிம்மன்