பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


சேந்தனின் இந்த சொற்களைக் கேட்டு இராசசிம்மன் சிறிது தயங்கினான். சக்கசேனாபதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். ‘போய் வாருங்கள்! எனக்குப் பிறருடைய இரகசியங்களைத் தெரிந்துகொள்வதில் அக்கறை கிடையாது. நான் இங்கேயே நின்று கொண்டிருக்கிறேன்” என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

சேந்தன் குமாரபாண்டியன் பின் தொடரக் கீழ்த்தளத்துக்கு இறங்கிக் குழல்வாய்மொழியின் அறைக்குள் போனான். குழல்வாய்மொழியும், அவர்கள் இருவருக்குப் பின்னால் சென்றாள். மூன்று பேரும் கப்பல் அறை வாசலை அடைந்த போது முதலில் குமாரபாண்டியனை உள்ளே போகவிட்டு, அடுத்து வந்த குழல்வாய்மொழியை வாசலிலேயே தடுத்து நிறுத்தினான் சேந்தன். சேந்தனின் அந்தச் செயல் இராசசிம்மனைத் திகைக்க வைத்தது. குழல்வாய்மொழிக்கு முகத்தில் அடித்தாற் போல் இருந்தது. -

“என்னுடைய அறைக்குள் நான் நுழைவதை நீங்கள் யார் தடுப்பதற்கு?”என்று சிவந்த உதடுகள் துடிக்க ஆத்திரத்தோடு சேந்தனைக் கேட்டாள் குழல்வாய்மொழி.

“இது உங்களுடைய அறைதான் என்பதில் சந்தேகமில்லை, அம்மணி! ஆனால் இப்போது நாங்கள் பேச வேண்டிய செய்தி எங்களுடையது” என்று அழுத்தமாகக் கூறிவிட்டுத் தானும் உள்ளே போய்க்கொண்டு, கதவை உட்பக்கம் தாழிட்டுக் கொண்டான் சேந்தன்.

முகத்தில் அறைந்ததுபோல் படீரென்று அடைபட்ட கதவுக்கெதிரே நின்ற குழல்வாய்மொழியின் அழகிய முகத்தில் கோபம் விளையாடியது.

நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக் கூடாது என்கிற பழமொழி சரியாகத்தான் இருக்கிறது என்று ஆத்திரந்தீரத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் அவள். கோபத்தில் இரண்டு கைவிரல்களையும் சேர்த்து நெரித்துச் சொடுக்கிக்கொண்டே வேகமாக மேல்தளத்துக்கு ஏறிப் போனாள் குழல்வாய்மொழி. அங்கே சக்கசேனாபதி நின்று