பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

633


அவன் அந்த வாலிபனைப் பற்றிய இரகசியத்தைக் கப்பலில் போகும்போது விரிவாகச் சொல்வதாகக் கூறிவிட்டான். அந்த வாலிபனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலைவிடக் காட்டில் இறந்த பெண்ணைப் பற்றியே எனக்கு அதிகம் கவலையாயிருக்கிறது!’ என்று குமாரபாண்டியன் பதில் சொன்னான்.

“சரி, விடை தாருங்கள். இன்னும் சில நாட்களில் படையோடு வந்து விழிஞத்தில் சந்திக்கிறேன்” என்று கைகூப்பி வணங்கிவிட்டுச் சக்கசேனாபதி கப்பலிலிருந்து கீழே இறங்கினார். கப்பலின் நங்கூரக் கயிறுகள் அவிழ்க்கப்பட்டன. குழல்வாய்மொழி கோபத்தோடு ஒரு மூலையில் நின்று கொண்டிருப்பதை இராசசிம்மன் பார்த்துக்கொண்டான்.

“கோபப்படுகிறவர்களெல்லாம் அதை என் மேலேயே செலுத்துவதென்று வைத்துக்கொண்டால் நான் ஒருவன் என்ன செய்யமுடியும்? குழல்வாய்மொழியின் கோபமில்லாத முகத்தையும், சிரிப்பையும் நான் பார்க்க ஆசைப்படுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவள் அருகில் சென்றான் இராசசிம்மன். அதே நேரத்தில் கப்பல்துறையிலிருந்து மெதுவாக நகர்ந்தது.

எங்கோ பராக்கு பார்த்துக்கொண்டு நின்ற குழல்வாய் மொழி விருட்டென்று திரும்பினாள். அப்பப்பா! அந்த முகத்தில்தான் எவ்வளவு கோபம்?

‘மகாமண்டலேசுவரருடைய கண் பார்வைக்குத் தான் ஆற்றல் அதிகம். இப்போது பார்த்தால் அவருடைய பெண்ணின் கண்கள் அதைவிட அழுத்தமாகப் பார்க்கும் சக்தி வாய்ந்தவை என்றல்லவா நினைக்கத் தோன்றுகிறது:”

‘நினைப்பீர்கள் ! நினைப்பீர்கள் ! ஏன் நினைக்க மாட்டீர்கள்? துறவியைப்போல் வேடம் போட்டு வேண்டியதைத் திருடிக்கொண்டு சொல்லாமல் ஓடிப்போகிற இளவரசருக்கு எதுவேண்டுமானாலும் நினைக்க முடியுமே? ஆண்களுக்கே வஞ்சகக் குணம் அதிகம். நெஞ்சு அழுத்தம் அதிகம். இல்லாவிட்டால் அந்தக் குட்டை மனிதர் என்னுடைய