பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

634

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


அறையிலேயே என்னை நுழையவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டு, உங்களோடு இரகசியம் பேசுவதற்குத் துணிய முடியுமா? திடீரென்று இரகசிய விஷயங்களை அறியத் தகுதியற்ற மூன்றாவது பேராக மாறிவிட்டேன் போலிருக்கிறது நான்! அப்படித்தானே?” - - -

“சேந்தன் செய்ததில் தவறென்ன குழல்வாய்மொழி! அரசாங்கக் காரியங்களைப் பேசும்போது பெண்கள் கூட இருப்பது நல்லதில்லைதானே?”

“அப்படியானால் என் தந்தை சேந்தனை மட்டுமே தனியாக இந்தக் கப்பலில் அனுப்பியிருக்கலாமே!”

“உண்ம்ைதான்! நீ ஏன் வீணாக அலையவேண்டும்?” என்று இராசசிம்மன் சொன்னதும் குழல்வாய்மொழியின் முகம் போன போக்கைப் பார்க்கவேண்டுமே! குங்குமச் சிவப்பில் திளைத்த அந்த முகம் சினத்தின் எல்லை இதுதான் என்று சொல்வது போலிருந்தது. -

“குழல்வாய்மொழி! இப்போது உன்னுடைய முகம் இந்தச் சங்கின் நிறத்தைப்போல் அழகாக இருக்கிறது” என்று வேடிக்கையாகச் சொல்லிக்கொண்டே, தன் பட்டுப் பையிலிருந்து வலம்புரிச்சங்கை வெளியே எடுத்தான் குமார பாண்டியன்.

அந்தச் சங்கை அவனுடைய கையில் பார்த்ததும் அவள் முகத்தில் சினத்தின் சுவடு குன்றி வியப்பின் சாயல் படர்ந்தது. செம்பவழத் தீவில் வரும்போது சந்தித்த படகுக்காரப்பெண் கூறியதை நினைத்துக்கொண்டாள் அவள். அப்போது சேந்தனும் அங்கே வந்தான்.

“ஆ! செம்பவழத் தீவில் அந்தப் பெண் கூறியபோதே நினைத்தேன். இதை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியவர் நீங்களாகத்தான் இருக்கவேண்டும் என்று. நான் நினைத்தது சரியாகவே இருக்கிறது” என்று சேந்தன் கூறினான்.

இராசசிம்மனுக்கு ஆச்சரியமாக இருந்தது; அவர்கள் வருகிற வழியில் தாங்கள் செம்பவழத் தீவில் இறங்கியதையும், அந்தப் பெண்ணைச் சந்தித்துவிட்டு வந்ததையும் கூறினார்கள்.