பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

635


“அவள் ஒர் அபூர்வமான பெண் ! ஒருவிதத்தில் நான் இப்போது உயிருடன் இருப்பதற்குக்கூட அவள்தான் காரணம். அவளை என்னால் மறக்கவே முடியாது” என்று குமார பாண்டியன் மதிவதனியைப் பற்றி உருக்கமாகப் புனைந்து சொன்னபோது குழல்வாய்மொழியின் புருவங்கள் வளைந்து கண்கள் சுருங்கின.

‘ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண்ணைப்பற்றி மனம் விட்டுப் புகழ்ந்து பேசுவதில் எவ்வளவு இடர்ப்பாடு இருக்கிறது? என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டு வாய்த் துடிப்பை அடக்கினான் இராசசிம்மன். -

“குமாரபாண்டியருக்கு என்ன? எல்லாப் பெண்களும் அவருக்குப் போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்ய முன் வருகிறார்கள்! தெரிந்தும், தெரியாமலும், சுய உருவிலும் மாறு வேடத்திலும் அவரைத் தேடிக் கொண்டு வருகிறார்கள். பெண்களின் உதவியை அமோகமாகப் பெறுகின்ற இந்த ஓர் அம்சத்தில் அவர் கொடுத்து வைத்தவர்தான்” என்று கண்களிலும், இதழ்களிலும் குறும்பு மிளிரக் குத்தலாகச் சொன்னாள் குழல்வாய்மொழி.

“எந்தப் பெண்ணும் நீ சொல்லுகிற மாதிரி மாறுவேடம் போட்டுக் கொண்டு எனக்கு உதவி செய்ய இதுவரை வரவில்லையே, குழல்வாய்மொழி! நீ உள்படச் சுய உருவுடன் தான் எனக்கு உதவி செய்திருக்கிறாய்!” என்று நகைத்தவாறே அவளுக்குப் பதில் சொன்னான்.

“ஏன் தங்களுக்கு மாறுவேடத்தில் அதிகப் பற்று உண்டென்று சமீபகாலத்து நிகழ்ச்சிகளால் தெரிய வருகிறதே” என்றான் சேந்தன். அவன் சொற்களை இடைமறித்துக் குழல்வாய்மொழி, “ஐயா, தென்பாண்டி நாட்டு இளவரசே! கொஞ்சம் நான் சொல்கிறபடி கேட்டு என்னோடு கீழ்த்தளத்து அறைக்கு வந்தீர்களானால் உங்களை ஆண்வேடத்தோடு சந்திக்க வருகிற பெண்களும் உண்டு என்பதற்குச் சரியானதொரு அடையாளம் என்னால் காட்டமுடியும் என்று இராசசிம்மனை அறைகூவி அழைத்தாள். அவள் ஏதோ விளையாட்டுத்தனமான பொய் கோபத்தோடு அப்படிச் சொல்கிறாள் என்று