பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


உண்டாயிற்றோ, அவ்வளவு வேகமாகத் தணிந்து மறந்து மறைக்கப்பட்டுவிட்டது. அவன் மனத்தில் அதற்குக் காரணம் நினைப்பதற்கும் குமுறிக் கொதிப்பதற்கும் வேறு நிகழ்ச்சிகளும் இருந்தன. அவன் மனத்தில், பகவதியின் மரணம் என்ற உண்மையை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதால் அத்துன்பமே போர்க்களத்துக்குப் போகிற வழியெல்லாம் அவன் மனத்தைச் சுட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு செய்தியும் அவன் மனத்தை உறுத்தியது. ஒருவருக்கும் தெரியாமல் தளபதியை மகா மண்டலேசுவரர் ஏன் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்?’ என்று குழம்பும் நிலையும் குமார பாண்டியனுக்கு இருந்தது. அவசரமாக விழிஞத்திலிருந்தே போர்க்களத்துக்குப் புறப்பட்டபோது இத்தனை மன உணர்ச்சிகளையும் எண்ணச் சுமைகளாகச் சுமந்து கொண்டுதான் புறப்பட்டான் அவன். ஆனால் போருக்குப் போகிறோம் என்ற உணர்வு பெரிதாகப் பெரிதாக இவை மங்கிவிட்டன.

மகாராணி வானவன்மாதேவியுடன் அரண்மனைக்குப் புறப்பட்ட குழல்வாய்மொழியின் மனத்திலும் உணர்ச்சிகள் குமுறின. மகாராணியும், விலாசினியும் பகவதியைப் பற்றிப் பேசிக்கொள்ளத் தொடங்கினால் அவளுக்கு உடனிருக்கவே முடியாதுபோல் ஒரு வேதனை ஏற்பட்டது. தெரிந்த உண்மையை வெளியிட முடியாமல் தவித்தாள். மகாராணியுடன் அரண்மனைக்கு வராமல் தந்தையோடு இடையாற்றுமங்கலம் போகலாமென்று நினைத்திருந்த அவளை மகாராணிதான் வற்புறுத்திக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டாரே! இன்னொரு வருத்தமும் அவளுக்கு இருந்தது. கப்பலில் வரும்போது அவளிடம் கோபித்துக் கொண்டு பேசாமலிருந்த இளவரசர் விழிளும் வந்த பின்னும் போருக்குப் புறப்பட்டுப் போகிறவரை ஒரு வார்த்தைகூடச் சுமுகமாகப் பேசவில்லை! போர்க்களத்துக்குப் புறப்படுகிற போது கண்குறிப்பாலாவது விடைபெற்றுக்கொள்வது போலத் தன்னைப் பார்ப்பாரென்று அவள் எதிர்பார்த்தாள். அதுவும் இல்லை. இளவரசரின் இந்தப் புறக்கணிப்பு அவள் மனத்தைப் புண்ண்ாக்கியிருந்தது.