பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

687


அரண்மனையில் மகாராணி, விலாசினி, புவனமோகினி என்று கலகலப்பாகப் பலருக்கு நடுவிலிருந்தாலும் குழல்வாய் மொழியின் மனம் எங்கோ இருந்தது. அரண்மனையில் தங்கியிருந்தபோது ஒருநாள் பேச்சுப் போக்கில் மகாராணி, புவனமோகினி! கோட்டாற்றுக்கு யாரையாவது அனுப்பித் தளபதியின் மாளிகையில் பகவதி இருக்கிறாளா என்று விசாரித்து அழைத்து வரச் சொல்லேன்’ என்று கூறியபோது உடனிருந்த குழல்வாய்மொழி துணுக்குற்றாள். தன் உணர்ச்சியை அடக்கிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டாள். இராசசிம்மனைப் பற்றியும், அவன் போரில் வெற்றி பெற்றுத் திரும்பப் போவதைப் பற்றியும், வெற்றியோடு வரும்போது அரண்மனையை எப்படி அலங்களித்து, அவனை எவ்வாறு வரவேற்பது என்பதைப் பற்றியும் குது.ாகலமாக அவர்களோடு பேசினார் மகாராணி. அந்த மாதிரிப் பேச்சுக்களிலெல்லாம் குழல்வாய்மொழியும் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டாள். குழல்வாய்மொழியைப் பொறுத்தவரையில் ‘விலாசினி’ என்ற பெண் புதிராக இருந்தாள். அவ்வளவாக மனம் விட்டுப் பழகவில்லை. மகாராணி விலாசினியையும், புவனமோகினியையும் தன்னுடன் சமமாக வைத்துப் பழக விடுவதும், பேசுவதும் குழல்வாய்மொழிக்குப் பிடிக்கவில்லை. அவள் இடையாற்றுமங்கலம் நம்பியின் பெண், அன்பைக்கூடத் தனக்கென்று தனி மரியாதையோடு எதிர்பார்த்தாள். இடையாற்றுமங்கலம் என்ற அழகின் கனவில் இளவரசி போல் அறிவின் கர்வத்தோடு சுற்றித் திரிந்தவளுக்கு எல்லோருக்கும் சம உரிமை கொடுக்கும் மகாராணியோடு அரண்மனையில் தானும் ஒருத்தியாக இருப்பது என்னவோ போலிருந்தது.

புவனமோகினியே மகாராணிக்காகப் பகவதியைப் பற்றி விசாரித்துக் கொண்டுவரக் கோட்டாற்றுக்குப் புறப்பட்ட போது குழல்வாய்மொழியின் பயம் அதிகமாயிற்று. எந்த வகையிலாவது மகாராணிக்கு உண்மை தெரிந்துவிட்டால் என்ன செய்வது என்று மனம் புழுங்கினாள் அவள். -

என் மனம் இந்த உண்மையை மறைப்பதற்காக ஏன் இப்படிப் பயப்படுகிறது? நான் அந்தப் பெண்ணைக் கொலையா செய்தேன்? திமிர் பிடித்தவள் தானாக ஓடிப்போய் இறந்தால் அதற்கு நான் என்ன செய்வேன்? என்று நினைத்துத் தன்