பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


எதை எதையோ நினைத்து அஞ்சுகிறதே!’ துணிவை வரவழைத்துக்கொண்டு அவரிடமே கேட்டான். அவன் இப்படிக் கேட்டதும் அவர் நேருக்குநேர் திரும்பி அவனுடைய முகத்தைப் பார்த்தார்! மெல்லச் சிரித்தார். வாடிய பூவைக் காண்பது போல் மங்கித் தென்பட்டது அந்தச் சிரிப்பு. சேந்தன் பயபக்தியுடனே அந்த முகத்தையும், அந்தச் சிரிப்பையுமே பார்த்துக்கொண்டு நின்றான். மெல்ல நடந்து அருகில் வந்து தம் சொந்தக் குழந்தை ஒன்றைத் தடவிக் கொடுப்பதுபோல் அவன் முதுகை இரு கைகளாலும் வருடினார் அவர்.

“சேந்தா! உன்னைப்போல் என்னிடம் நன்றி விசுவாசங்களோடு உழைத்த மனிதன் வேறு யாருமில்லை. உன்னிடம் எந்த அந்தரங்கத்தையும் நான் மறைக்கக்கூடாது. ஆனாலும் இப்போது என்னிடம் எதுவும் கேட்காதே. பேசாமல் என்னுடன் இடையாற்றுமங்கலத்துக்கு வா. இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அவருடைய கண்கள் கலங்கி ஈரம் கசிந்து பளபளப்பதை அவன் பார்த்துவிட்டான். அதைப் பார்த்ததும் சேந்தனுடைய மனத்தை ஏதோ ஒர் அவல உணர்வு இறுக்கிப் பிழிந்தது. அழுகை வந்துவிடும் போலிருந்தது. அரிய முயற்சியின் பேரில் தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, அவரோடு இடையாற்றுமங்கலம் சென்றான், இடைவழியிலுள்ள ஊர்களிலெல்லாம் போர்க்காலத்தில் நிலவும் பயமும், பரபரப்பும் நிலவிக் கொண்டிருந்தன. வேளாண்மைத் தொழில் சரியாக நடை பெறவில்லை. ஊர்கள் கலகலப்புக் குறைந்து காணப்பட்டன. பறளியாற்றில் நீர் குறைந்து காலால் நடந்து அக்கரை சேர்ந்துவிடுமளவுக்கு ஆழமற்றிருந்தது. கரையோரத்து ஆலமரங்களில் இலைகள் பழுத்தும், உதிர்ந்தும் விகாரமாகத் தென்பட்டன. சோகமயமான பெரிய நிகழ்ச்சி ஒன்று வருவதற்கு முன் கூத்தரங்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவையினரின் அமைதிபோல இடையாற்று மங்கலம் தீவும், மகாமண்டலேசுவரர் மாளிகையும் நிசப்தமாயிருந்தன.

சேந்தனும் மகாமண்டலேசுவரரும் பறளியாற்றைக் கடந்து இடையாற்றுமங்கலத்தை அடையும்போது நண்பகலாகிவிட்டது. வெயில் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்தது. அம்பலவன்