பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 70t

மங்கலத்துச் சிவன் கோவிலில் நான் செய்த அத்தனை வழிபாடும் அறிவின் ஆணவத்தோடு செய்தவை. ஏனென்றால் அந்த வழிபாடுகளின்போது நான் மனமுருகிக் கண்ணிர் சிந்தியதில்லை. இன்று செய்த வழிபாடுதான் உண்மையான வழிபாடு. இன்றைக்கு வடித்த கண்ணிரில் என் அறிவுக் கொழுப்பெல்லாம் கரைந்துவிட்டது அப்பா! ஒவ்வொரு தலைமுறையிலும் மனிதனுக்குக் காலங்கடந்து புத்தி வருவதால்தான் விதியின் வெற்றிகள் அதிகமாகிவிடுகின்றன. சேந்தா! நான் மறுபடியும் ஒரு பிறவி எடுத்தால் அறிவாளியாகப் பிறக்கமாட்டேன். பக்திமானாகப் பிறப்பேன். பாடியும், அழுதும், தொண்டு செய்தும் என்னை அழித்துக்கொண்டு இன்பம் காண்பேன்.” இந்தக் கடைசி வாக்கியத்தைச் சொல்லும்போது இடையாற்றுமங்கலம் நம்பியின் குரலில் அழுகை குமுறிப் பாய்ந்தது. குரல் தழுதழுத்துப் பேச்சு தடைப்பட்டது. இரண்டு கன்னங்களிலும் கண்ணிர் முத்துக்கள் உருண்டு வடிந்தன.

அதுவரை சிலைபோல் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த சேந்தன், வாய் திறந்தான். “சுவாமி! இந்த விநாடியே தாங்கள் உத்தரவு கொடுத்தால் தங்கள் எதிரிகளை அழித்தொழித்துவிட என்னாலான முயற்சியைச் செய்கிறேன். தாங்கள் இப்படி நைந்து மனம் புண்பட்டுப் பேசுவது நன்றாகயில்லை!” இதைக் கேட்டு அவர் பலமாக வாய்விட்டுச் சிரித்தார். “சேந்தா! நீ நன்றியுள்ள ஊழியன். ஆனால், உன் கைகளின் ஆற்றல் விதியின் ஆற்றலுக்கு முன் மிகச் சிறியவை. என்னுடைய எதிரிகளால் என்னென்ன சீரழிவுகள் வரப்போகின்றன என்பதை நீ உடனிருந்து காணப் போவதில்லை! அதற்குள் ஒரு மாபெரும் சன்மானத்தை - நீ கனவிலும் எதிர்பார்த்திராத சன்மானத்தை-உனக்குக் கொடுத்து, உன்னிடம் நான் பட்டிருக்கும் நன்றிக்கடனைத் தீர்த்து, உன்னை இங்கிருந்து அனுப்பிவிடுவேன்” என்றார்.

“சுவாமி! அப்படியெல்லாம் சொல்லி என் மனத்தைப் புண்படுத்தாதீர்கள், நன்றியுமில்லை; கடனுமில்லை. இந்த உடல் உங்களுக்குச் சொந்தம். உங்களுக்கே உழைத்துச் சாவதற்குக் கடமைப்பட்டது” என்று உருக்கமாகச் சொன்னான் சேந்தன்.

‘அதெல்லாமில்லை ! நான் எதை உனக்குக் கொடுக்கிறேனோ அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேனென்று