பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


சொற்கள் தடைப்பட்டு உருக்குலைந்து வெளிவந்தன. அவள் அவ்வாறு பேசி நிறுத்தியபின் அங்கு ஒரு விதமான அமைதி நிலவியது. . . - .

அவள் சொல்லி முடித்த பின்பும் சிறிது நேரம்வரை மகாராணி முதலியவர்களுக்கு அவர்களுடைய சொற்களில் நம்பிக்கை உண்டாகவே இல்லை. மகாராணி சோகம் தோய்ந்த குரலில் கூறலானார். -

“பவழக்கனிவாயரே! இதெல்லாம் உண்மையாயிருக்கு மென்றே என்னால் நம்பமுடியவில்லையே? பகவதி எப்போது இலங்கைக்குப் போனாள்? மகாமண்டலேசுவரர் ஏன் அவளைக் கொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்? தளபதிக்கும் அவருக்கும் அவ்வளவு பெரிய பகைமை இருப்பதற்கு ஒரு காரணமும் இல்லையே? இந்த மாதிரிச் செய்திகளையெல்லாம் மகாமண்டலேசுவரர் மேல் வெறுப்புக்கொண்ட கூற்றத் தலைவர்கள் யாராவது பொய்யாகத் திரித்து விட்டிருப்பார்களோ? இது என்ன கெட்ட காலம்: ஒரு பக்கத்தில் நாட்டின் எதிர்காலத்தையே முடிவு செய்து நிர்ணயிக்கும்படியான போர் நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் இன்னொரு பக்கத்தில் இப்படி உள் நாட்டுக் குழப்பம் எழுந்தால் எவ்வளவு கேவலம்?”

“மகாராணி! நீங்கள் கூறுவதுபோல் எனக்கும் இதில் நம்பிக்கை ஏற்படமாட்டேன் என்கிறது. பகவதி ஈழ நாட்டில் போய் மரணமடைந்திருந்தால் குமாரபாண்டியருக்குத் தெரியாமலா போகும்? அவ்வளவேன்? நம்மோடு இங்கேயே தங்கியிருக்கும் மகாமண்டலேசுவரரின் பெண் குழல்வாய்மொழியைக் கேட்டால் எல்லா விவரமும் தானே தெரிந்துவிடுகிறது. எங்கே? அந்தப் பெண்ணை உள்ளேயிருந்து இப்படிக் கொஞ்சம் கூப்பிட்டு அனுப்புங்களேன். உடனே விசாரித்துவிடலாம்” என்று பவழக்கனிவாயர் கூறியவுடன் “இதோ நான் போய் உடனே இடையாற்றுமங்கலத்து நங்கையை உள்ளேயிருந்து கூப்பிட்டுக்கொண்டுவருகிறேன்” என்று விலாசினி சென்றாள். அப்போது அதங்கோட்டாசிரியர் கூறினார்; ‘மகாராணி! நம்பிக்கை உண்டாவதும்,