பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

714

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


அவர். “அப்பா! மகாராணிக்குக் கூட இதெல்லாம் தெரிந்துவிட்டது. புவனமோகினி என்ற பணிப் பெண் போய்ப் பார்த்துக்கொண்டு வந்து கூறினாள்” என்று குழல்வாய்மொழி சொன்னபோதும் வியப்படையவில்லை அவர். -

“பெண்ணே ! உலகம் முழுவதும் தெரியட்டும். தெரிய வேண்டியதுதானே? மறைப்பதற்கு இனி என்ன இருக்கிறது: நான் இப்போது படுகிற கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! அதைப் போக்குவது உன் கையில் இருக்கிறது!” என்று தம் பெண்ணிடம் சொல்லிவிட்டு அருகிலிருந்த சேந்தனையும், அம்பலவன் வேளானையும் சிறிது தொலைவு விலகிப் போய் இருக்குமாறு குறிப்புக் காட்டினார், அவர்கள் சென்றார்கள்.

“நான் என்ன அப்பா செய்ய வேண்டும்!” என்று கேட்டாள் குழல்வாய்மொழி.

“எனக்காக நீ ஒரு மகத்தான தியாகம் செய்ய வேண்டும் மகளே!”

குழல்வாய்மொழி கண்களில் நீர் அரும்ப மருண்டு தயங்கி நின்றாள். மகுடமிழந்து, கம்பீரமற்றுச் சாதாரண மனிதரைப் போல் சிவன் கோவிலில் கிடக்கும் தந்தையைக் கண்டு பிழியப் பிழியக் கண்ணிர் சிந்தி அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு “என்னம்மா அப்படி என்னைப் பார்க்கிறாய்? இந்த இரண்டு மூன்று நாட்களில் நான் இவ்வளவு இளைத்துப் போய்விட்டேனே என்றுதானே பார்க்கிறாய்? போகட்டும்; என் இளைப்பைக் கண்டு நீ வருந்த வேண்டாம். நான் கேட்டதற்கு மறுமொழி சொல்!” - “நான் எதைத் தியாகம் செய்ய வேண்டும், அப்பா?” குழல்வாய்மொழியின் குரலில் துயரம் கரகரப்படைந்து ஒலி மங்கியது.

“நான் ஒரு மனிதனுக்குத் தவிர்க்க முடியாதபடி கடன் பட்டிருக்கின்றேன். மகளே! அந்தக் கடனை உன் தியாகத்தால் தீர்க்க வேண்டும். செல்வச் செருக்கோடு வளர்ந்துவிட்ட உனக்கு மற்றவர்களை அதிகாரம் செய்யவும், ஆளவும் ஆட்படுத்தவும்தான் தெரியும். ஆனால் இன்று தொடங்கி நீ இன்னொருவருக்கு ஆட்பட்டு அடங்கவேண்டிய காலம் வந்து விட்டது. என்னுடைய அறிவின் அகந்தை அழிந்துவிட்டது.