பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

715


அதுபோலவே உன்னுடைய அன்பின் அகந்தையும் அழிய வேண்டியது தான். செல்வம், செருக்கு, பிடிவாதம், முரண்டு இவற்றையெல்லாம் மறந்துவிட்டால்தான் நான் கூறுகிற தியாகத்தை நீ செய்ய முடியும் அம்மா ?”

“உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறேன் அப்பா!’

‘இப்போது சொன்ன வார்த்தை மெய்தானா மகளே? எனக்காக எதையும் செய்வாய் அல்லவா?” -

தந்தையின் இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் குழல் வாய்மொழி விசும்பலோடு அழத்தொடங்கிவிட்டாள். “நான் எப்போது அப்பா உங்கள் சொல்லை மீறியிருக்கிறேன்? என்னைத் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்களே ‘ என்று அவள் அழுகைக்கிடையே கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்; * * ,

‘அப்படியானால் கேள்! இந்தக் கணமே குமாரபாண்டியனைப் பற்றிய உன் கனவுகளை அழித்துவிடு. தன் வாழ் நாளில் எனக்காகவே தன்னை அடிமையாக்கிக் கொண்டு உழைத்த இந்த நன்றியுள்ள மனிதன் சேந்தனை மணந்துகொண்டு அவனோடு செல்; இது என் கட்டளை.”

“அப்பா..!” என்று அலறினாள் குழல்வாய்மொழி. அதற்குமேல் வார்த்தைகளே எழவில்லை அவளுக்கு அப்படியே மின்னற்கொடிபோல் சுருண்டு அவர் காலடியில் விழுந்தாள் அவள். கோவென்று கதறியழுத மகளின் தவிப்பு அவர் மனத்தை மாற்றவில்லை. “அப்பா என்னைக் கொன்று விடுங்கள். என்னால் இந்தத் தியாகத்தைச் செய்ய முடியாது’ என்று அவள் கதறியபோது அவர் ஒவ்வொரு வார்த்தையாக யோசித்துப் பேசுபவர்போல் அவளைத் துாக்கி நிறுத்தி முகத்தைப் பார்த்துக்கொண்டே பேசினார். -

“உன்னை ஏன் கொல்லவேண்டும் அம்மா? என்னைக் கொன்றுகொள்கிறேன் நான் சொன்ன வார்த்தையைக் கேட்காத ஒரு முரட்டுப் பெண்ணைப் பெற்றதற்காக என்னை நானே கொன்றுகொள்கிறேன். தியாகம் செய்து புகழ் தேடிக்கொள்ளும் உயர்ந்த பண்புள்ள மகளை நான் பெறவில்லை போலிருக்கிறது.