பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

85


“நில், அப்படியே! செய்ய வேண்டியதைத்தான் செய்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே ஒலையைச் சுடரில் காட்டினார் இடையாற்றுமங்கலம் நம்பி. அந்த ஒலையில் தீப்பற்றியது.


10. உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை

இந்தக் கதையின் ஆரம்பத்தில் கன்னியாகுமரிக் கடற்கரையில் சந்தித்த பயங்கர ஒற்றர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் நேயர்களுக்கு இருக்கும் அல்லவா? அந்த ஒற்றர்கள் வந்த நோக்கம், அனுப்பப்பட்ட விதம் இவை பற்றி இதற்குள்ளேயே ஒருமாதிரி அநுமானித்துக் கொள்ள முடிந்தாலும் இங்கே அதைப்பற்றிச் சற்று விரிவாகக் கூறிவிட வேண்டியது அவசியம்தான்.

மன்னாதி மன்னரும், தென் திசைப் பேரரசருமாகிய பராந்தக பாண்டியர் காலமானபின் வடதிசை மன்னர் பாண்டி நாட்டின் மேல் படையெடுத்ததும் குமார பாண்டியனாகிய இராசசிம்மன் ஈழத்தீவுக்கு ஒடிப்போனதும், வட பாண்டி நாடு எதிரிகளின் வசப்பட்டதும் ஏற்கனவே நேயர்கள் அறிந்து கொண்ட நிகழ்ச்சிகள்.

வடதிசை வேந்தர்களின் ஆசை வட பாண்டி நாட்டை வென்றதோடு அடங்கி விடவில்லை; அவர்கள் தென் பாண்டி நாட்டையும் கைப்பற்ற விரும்பினார்கள். முக்கியமாக அந்த விருப்பத்துக்கு மூன்று காரணங்கள் இருந்தன.

முதல் காரணம், பராந்தகனின் கோப்பெருந்தேவி உயிருடன் தப் பிச் சென்று தென் பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரின் பாதுகாப்பில் வாழ்கிறாள் என்று அவர்கள் தெரிந்து கொண்டது. அவள் உயிருடன் இருக்கிறவரை என்றாவது எப்படியாவது தன் புதல்வன்