பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

89


கொடும்பாளுரான் வெறிச் சிரிப்புச் சிரித்தான். அவனுடைய கோரம் நிறைந்த பயங்கர முகத் தோற்றத்தையும் அந்தச் சிரிப்பையும் ஒன்று சேர்த்துப் பார்த்தபோது அது உடனிருந்த மற்ற இருவருக்குமே அச்சமூட்டியது. அவன் வாயிலிருந்து வெளிவரப்போகும் முடிவு என்னவென்று அறியும் ஆவலுடன் இருவரும் காத்திருந்தனர்.

ஆனால் அவனோ அவர்களுடைய ஆவலை மேலும் சோதிக்கிறவனைப் போல ஒன்றும் பேசாமல் அங்கே கிடந்த ஒலைகளில் எழுத்தானியால் கைபோன போக்கில் ஏதோ கிறுக்கத் தொடங்கினான். அரிசூருடை யானு ம் கோப்பரகேரியும் வியப்படைந்து திகைத்தனர். அவன் என்ன செய்கிறான் என்பதையே அவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. பார்த்துக் கொண்டே மலைத்துப்போய் அமர்ந்திருந்தனர். சில விநாடிகளுக்குள் ஆச்சரியகரமானதொரு காரியத்தைச் செய்து காட்டினான் கொடும்பாளுர் மன்னன்.

எழுத்தாணி கொண்டு மூன்று ஒலைகளிலும் கோடுகளால் சில படங்களை வரைந்து விட்டான் கொடும்பாளுர் மன்னன். சில எழுத்துக்களும் அவற்றில் தென்பட்டன. தன் மனக் கருத்தை அவன் வெளியிட்ட சாமர்த்தியமான முறை அவர்களைப் பிரம் மிக்கச் செய்துவிட்டன.

“இதோ, இவற்றைப் பாருங்கள் ! என் கருத்து விளக்கமாகப் புரியும்” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே அந்த ஒலைகளை அவர்களிடம் நீட்டினான் அவன். கொடும்பாளூர் மன்னனின் முரட்டுக் கையில் அவ்வளவு நளினம் மறைந்து கொண்டிருக்குமென்று அரசூருடையானோ, அல்லது பரகேசரியோ கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

அவர்கள் இருவரும் அவன் கொடுத்த அந்த ஒலைகளை யெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்தனர்.

முதல் ஒலையில் மகாராணி வானவன் மாதேவியைப் போல் ஓர் உருவம் வரையப்பட்டிருந்தது. அந்த உருவத்தின்