பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5
கிளி பறந்தது


“அரசன் எப்படி இருக்கிறான்?” என்று கேட்டாள் அமைச்சரின் மனைவி. தம் அரசன் நன்றாக இருக்கவேண்டும், திறமையாக ஆட்சி புரிய வேண்டும் என்ற கவலை நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருடைய உள்ளத்திலும் இருந்தது. பொறுப்புள்ள அமைச்சருடைய மனைவிக்கு அந்தக் கவலை இருப்பது வியப்பு அல்லவே!

“பாண்டிய குலத்தின் பெருமையை நாளுக்கு நாள் உணர்ந்து பாராட்டுகிறேன்” என்றார் அமைச்சர்.

“பழையவர்கள், முன்பு இருந்த பாண்டியர்களின் பெருமையையா? இப்போதுள்ள இளைஞனின் பெருமையையா?”

“அது வேறு, இது வேறா? கங்கையாற்று நீரைப் போல இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது தானே? இடையறாது வருவது பாண்டிய பரம்பரை; அதனுடைய பெருமையும் நீரோட்டம்போல-கங்கையாற்றின் நீரோட்டம்போல-கோடை யென்று குறையாமல் தடையின்றி வருவது. இந்த உண்மையை இப்போது நன்றாக உணர்கிறேன்.”

“அரசன் பெரியவர்கள் சொல்வதைக் கேட்கிறானா? மனத்தில் வாங்கிக் கொள்கிறான?”

“அவன் சொல்வதை நாங்களும் வாங்கிக்கொள்கிறோம்.”

“நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை.”

“இத்தனை சிறிய பிராயத்தில் அறிவும் பெருந்தன்மையும் எவ்வளவு முழுமையாக அமைந்திருக்கின்