பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளி பறங்தது

11


போர் மூண்டது. மாந்தரஞ் சேரல் இரும் பொறை மண்ணாசைக்கு அடிமையாகித் தானே படைத்தலைமை தாங்கி நேரே பாண்டி நாட்டுக்குள் புகுந்து விட்டான். நாட்டின் எல்லையைக் கடந்து சிறிது தூரம் வந்துவிட்டான். நெடுஞ்செழியன் இளையவனாக இருந்தும் தானே போர் முனைக்குப் போக வேண்டுமென்று துடிதுடித்தான்.

சேரன் படையின் அளவை ஒற்றர்களின் வாயிலாக முன்பே தெரிந்துகொண்டிருந்தனர் படைத்தலைவர்கள். அந்தப் படையை எளிதில் புறங்கண்டு விடலாம் என்று தெளிந்தார்கள். அரசன் போருக்குச் செல்லவேண்டு மென்று துடிப்போடு இருப்பதை உணர்ந்த அமைச்சர் தலைவர் அவனை அணுகித் தம் கருத்தைக் கூறினார். இந்தப் போர் மிகவும் சிறிய போராகவே இருக்குமென்றும், மாற்றான் வலியைத் தெரியாமல் சிறிய படையுடன் சேரன் வந்திருக்கிறானென்றும் எடுத்துக் காட்டினார்.

“முதல்முதலாக நம்மை நாடி வரும் வெற்றி மகளை ஏற்றுக்கொள்ள வேண்டாமா?” என்றான் அரசன்.

“அதற்குரிய பருவம் உண்டு” என்று பணிவாகச் சொன்னார் அமைச்சர்.

“நான் இளையவன் என்று அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டான் நெடுஞ்செழியன்.

“இல்லை, இல்லை. இந்தப் போர் சிறு போர். இதில் பெறுவது பெரிய வெற்றி ஆகாது. அரசர்பிரானுடைய கன்னிப் போர் பெரிய போராக இருந்தால்