பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளி பறந்தது

15


ஒரு நாள் கிளி தப்பி ஓடிவிட்டது. அதில் வியப்பு ஒன்றும் இல்லை. சேரமான் மாந்தரஞ் சேரல் இரும் பொறை சிறையினின்றும் தப்பி ஓடிவிட்டான்; பெற்றேன், பிழைத்தேன் என்று தன் மாநகரைப் போய் அடைந்தான்.

சிறைப்பட்ட சேரன் தப்பி ஓடிவிட்டான் என்று பாண்டியன் நெடுஞ்செழியன் அறிந்தான். காவலரளர்கள், அரசன் என்ன செய்வானோ என்று அஞ்சி நடுங்கினார்கள். படைத் தலைவரது தண்டனைக்குத் தாம் ஆளாகவேண்டும் என்பதில் அவர்களுக்குச் சிறிதும் ஐயம் உண்டாகவில்லை.

ஆனால் அரசன் பெருந்தன்மை இப்போதும் புலப்பட்டது. “நாம் சேரனை விருந்தாளியாக வைத்துப் பாதுகாத்தோம். சிறைப்பட்டவன் என்ற எண்ணம் யாருக்கும் தோன்றாதபடி அவன் சுகமாக இருந்தான். காவலர்களுக்கே அவன் சிறைப்பட்டிருக்கிறான் என்ற நினைவு இல்லாமற் போயிருக்கும். அதனால் சோர்ந்து விட்டார்கள். குற்றம் இல்லை. இனிமேல் இப்படி நடவாமல் இருந்தால் போதும்” என்று சொல்லி அருள் பாலித்தான்.

“சேரன் ஓடிப் போய்விட்டானே!” என்று ஓர் அமைச்சர் அங்கலாய்த்தார்.

“போனல் போகட்டுமே. எத்தனை நாளைக்கு அந்த யானையைக் கட்டித் தீனி போடுவது? நாமாக ஒரு நாள் பெருந்தன்மையோடு உன் ஊருக்குப் போய் வா என்று அனுப்பியிருப்போம். அதனால் நமக்குப் பெருமை வந்திருக்கும். அந்தப் பெருமையை