பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21
வஞ்சினம் வெடித்தது

டிருக்கிறான். “அரசனே இளையவன்; நாடோ பெரிது; நாம் வென்றால் நமக்குக் கிடைக்கும் பொருள் அளவற்றது” என்று சோழனும் பிறரும் சொல்லச் சொல்ல எருமையூரனுக்கு நாவில் நீர் ஊறிற்று; “உங்கள் கருத்துக்கு இணங்குகிறேன்” என்று உடன்பட்டான்.

“இன்னும் யார் யாரைச் சேர்த்துக்கொள்ளலாம்?” என்று கேட்டான் சோழன். அந்தப் பக்கங்களில் யாரேனும் தக்க படை வலிமையுடன் இருந்தால் துணையாகச் சேர்த்துக்கொள்ளலாமே என்பது அவன் எண்ணம். படை பெருகப் பெருக வெற்றி உறுதிப்படும் அல்லவா? விரைவிலும் நினைத்த காரியத்தை நிறைவேற்றி விடலாம்.

எருமையூரன் இரண்டு பேரைச் சொன்னான். “துவார சமுத்திரத்தில் புலிகடிமால் மரபில் வந்த இருங்கோவேள்மான் இருக்கிறான்; அவனைக் கேளுங்கள். தகடூரில் எழினி யென்னும் வேள் இருக்கிறான்; அவனை உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். அவனையும் துணை சேர்த்துக்கொள்ளலாம்... இன்னும்..."

“போதும், போதும். இப்போதே நாம் ஐந்து பேர் இருக்கிறோம். ஐந்து பேர் சேர்ந்து நூற்று வரை முறியடித்த நாடு இது. நீங்கள் சொன்ன இரு வரையும் அணுகிக் கேட்கிறோம். உடன்பட்டால் சேர்த்துக்கொள்கிறோம்; இல்லையானால் நாம் ஐவரும் போதும்; இந்த உலக முழுவதுமே வென்றுவிடலாம்” என்றான் சோழன்.

எருமையூரன் சிரித்துக்கொண்டான். “பல காலமாகப் புகழ் படைத்து விளங்கும் பாண்டியனது