பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பாண்டியன் நெடுஞ்செழியன்

பொருது வென்ற கோளரிக்கு முயல் எம்மாத்திரம்? ஒரு சிறு படையை அனுப்பி வேள் எவ்வியை ஓட்டச் செய்ததோடு அவன் நாட்டையும் அகப்படுத்தச் செய்தான். அப்போதுதான் எவ்விக்கு உணர்வு வந்தது. இவ்வளவு பெரிய அரசை எதிர்த்தது எவ்வளவு பேதைமை என்று தெரிந்துகொண்டான். ‘இனி இத்தகைய, செயலைச் செய்யேன். இப்போது நான் செய்த பிழைக்காக எனக்குரிய மிழலைக்கூற்றத்தைப் பாண்டியனுக்கு அளித்துவிடுகிறேன்’ என்று சமாதானம் பேசினான். பாண்டியனுக்கு நாடாசை இல்லாமையால் அவன் விருப்பப்படியே அவனை மன்னித்து, அவன் வழங்கிய மிழலைக்கூற்றத்தை மட்டும் தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டான்.

இவ்வாறு வேறு சிவ பழைய வேளிர் குறும்பு செய்தனர். அவர்களையும் அடக்கி அவர்களுடைய முத்தூற்றுக்கூற்றம் என்ற நிலப் பகுதியைத் தன்னுடைய தாக்கிக்கொண்டான்.

நாளுக்கு நாள் பாண்டிய மன்னனுடைய வீரம் ஓங்கி வளர்ந்தது. இளமை மிடுக்கும் குலத்திற்கேயுரிய திறலும் சந்தர்ப்பமும் சேரச் சேர அவனுக்கு எப்போதுமே போரில் நாட்டம் இருந்து வந்தது. மிகச் சிறிய பகையானாலும் பெரும் பகையானாலும் தானே நேரில் சென்று போர் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் வளர்ந்தது. அவ்வாறே சென்று போரிட்டு வெற்றி பெற்றான்.

நெடுஞ்செழியன் அரியணை யேறியது முதல் தொடர்ந்து பெரும் போர்களும் சிறு போர்களுமாகவே நிகழ்ந்துகொண்டிருந்தன. பாண்டி நாட்டு வீரர்