பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
51
நெடுநல் வாடை

றன. அவற்றைத் தேடுவார் இல்லாமையால் அவற்றைச் சுற்றிச் சிலந்தி கூடு கட்டியிருக்கிறது.

வீடுகளில் மேலே சாளரங்கள் இருக்கின்றன. தென்றற் காற்று வீசுவதற்கு வாய்ப்பாக உள்ளவை அவை. இப்போது அவற்றின் இரட்டைக் கதவுகளையும் சாத்தித் தாழிட்டிருக்கிறார்கள். தண்ணீரை அருந்துவாரே இல்லை. நெருப்பு முட்டிகளில் தழலைப் போட்டு நீரைக் காய்ச்சி உண்ணுகிறார்கள். நீராகவா இருக்கிறது அது? நெருப்பைப்போலக் கொதிக்கிறது. கிழவரும் குமரரும் அந்த நெருப்பை அருந்துகிறார்கள்! ஆடுகிற மகளிர் பாட்டுக்குச் சுருதி சேர்க்க யாழை எடுக்கிறார்கள். குளிரால் அது சுருதி மாறியிருக்கிறது. அதைத் தம் மார்புச் சூட்டிலே தடவிச் சுருதி சேர்க்கிறார்கள்.

தம்முடைய கணவரைப் பிரிந்திருக்கும் மகளிர் எல்லாம் வருத்தமுற்றிருக்கிறார்கள். கூதிர்க்காலம் இந்தச் செயல்களுக்கெல்லாம் காரணமாக வந்து நிற்கிறது.

இனிமேல் அரண்மனைக்குப் போகலாம். அதைப் பார்த்துவிட்டு, அந்தப்புரத்தில் நெடுஞ்செழியனுடைய மனைவி அவன் பிரிவினால் வருந்தும் நிலையைப் பார்க்க வேண்டும் அல்லவா? நக்கீரர் நம்மை அழைத்துச் சென்று ஒவ்வொன்றாகக் காட்டுகிறார். இப்போது அரண்மனைக்கு வருகிறோம்.

அரசனுக்கு ஏற்றபடி வகுத்த திருமாளிகை அது. நல்ல காலத்தில் தக்க முகூர்த்தத்தில் நூலைக் கட்டி அளவு பார்த்துத் தொடங்கிக் கட்டியிருக்கிறார்கள். அரண்மனையில் எத்தனையோ கட்டிடங்கள்