பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

பாண்டியன் நெடுஞ்செழியன்

யோடும் ஆடும் ஓசை ஒரு பக்கம். இப்படி எழும் ஓசைகளெல்லாம் வானத்திலே சென்று இசைக்கின்றன.

பாணர்கள் வாழும் சேரிகள் அங்கங்கே உள்ளன. இத்தகைய மருத நிலம் ஒரு சார் விளங்குகிறது.

முல்லை நிலம் ஒரு பக்கம் இருக்கிறது. அதில் சிறிய தின முற்ற, அதை அறுக்கிறார்கள். எள்ளுக் காய்கள் முற்றி விளைகின்றன. வரகு கதிர்விட்டு நிற்கிறது. ஆழ்ந்த குழிகளிலே மணிகள் ஒளி விடுகின்றன. வளர்ந்த காட்டில் பொன் துகள் கொழிக்கின்றது. மான்கள் பிணையோடு துள்ளுகின்றன. கொன்றை மரத்தின் கீழே உள்ள பாறையில் பரப்பினாற் போல மலர்கள் உதிர்கின்றன. நீலநிறம் பெற்று வளர்ந்த பயிர்களின் மேலே முசுண்டைப் பூவும் முல்லைப் பூவும் உதிர்கின்றன. தெளிந்த நீரையுடைய பள்ளங்களில் நீலமணியைப் போன்ற நெய்தலும், தொய்யிற் கொடியும் மலர்கின்றன. பூசாரி பூசை போட்டுப் பல மலர் தூவி முருகனை வழிபடும் களம் போலத் தோன்றுகிறது இந்த இடம். இப்படி மலரழகு பெற்று விளங்குகிறது முல்லை நிலம்.

குறிஞ்சி நிலத்தைக் காண்போம். சந்தன மரங்கள் காடாக வளர்ந்திருந்தன, மலைச் சாரலில், அவற்றை வெட்டித் தோரை நெல்லை விதைத்திருக்கிறார்கள் குறிஞ்சி நில மக்கள். வெள்ளைக் கடுகையும் பயிர் செய்திருக்கிறார்கள். ஐவன நெல்லும் வெண்னெல்லும் விளைந்திருக்கின்றன. பாறைகளில் இஞ்சியையும், மஞ்சளையும், மிளகையும் வேறு பண்டங்களையும் குவித்திருக்கிறார்கள்.

இந்த நிலத்திலும் பலவகை ஓசைகள் செவியிலே விழுகின்றன. தினை விளையும் மலைச் சாரல்களில் குற