பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
91
நிறைந்த வாழ்வு


அப்போது அவனுக்கே அமைதி யென்பது இன்னது என்ற உணர்ச்சி பிறந்தது. ஞான நூல்களைத் தக்கார் வாயிலாகக் கேட்டான். இந்த அமைதியிலே கிடைக்கும் இன்பத்துக்கு ஈடில்லை என்பதை அநுபவத்திலே தெளிந்தான்.

பிற நாட்டார் வந்து பாண்டி நாட்டில் நிலவும் அமைதியைக் கண்டு வியந்து பாராட்டினார்கள். மக்களிடம் உள்ள மன நிறைவு அவர்களைக் கவர்ந்தது. ஆக்க வேலைகளிலும் அமைதி பெறும் வழியிலும் ஈடுபட்ட அரசனை வணங்கிப் போற்றினார்கள். வேற்று நாட்டு மன்னர்கள் நெடுஞ்செழியனிடம் நட்புப் பூண்டு அடிக்கடி கையுறைகளுடன் வந்து கண்டு மகிழ்ந்தார்கள். அவன் செய்யும் நற் கருமங்களுக்குத் துணையாக நின்று ஏவல் செய்தார்கள்.

இந்தக்காட்சியைக் கண்ட மாங்குடி மருதனாருக்கு உவகை தாங்கவில்லை.

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றமாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே

என்று பாடினார்.

புலவர்கள் அவன் புகழைப் பலபடியாக விரித்துப் பாடினார்கள். யாழ் வாசிக்கும் பாணர்கள் வந்து பாடிப் பரிசில் பெற்றார்கள். பொருநரும் விறலியரும் கூத்தரு


அமைந்த கேள்வியையும் ஐம்புலனும் அடங்கிய விரதங்களேயும் நான்கு வேதத்தையுமுடைய அந்தணர் சுற்றமாக, வேந்தர் தக்க ஏவல்களைச் செய்ய நிலைபெற்ற வேள்வியைச் செய்து முடித்த வேந்தனே!