பக்கம்:பாண்டியர் வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

'

முகவுரை


உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பலவகையாலும் ஆய்ந்து, உண்மைச் சரிதங்களை மக்கள் ல்லோரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டு காபாற்றி வருகின்றனர். நம் தமிழகத்தில் முற்காலத்தில் ஆட்சிபுறிந்த தமிழ் வேந்தர்களான சேர சோழ பாண்டியர்களின் வ்ரலாறுகள் நமக்கு மகிழ்ச்சியும் உணர்ச்சியும் அளிக்க வல்லன என்பது யாவரும் அறிந்ததொன்றாம். கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் தமிழ் நூல்களையும் பிற ஆராய்ச்சி நூல்களை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பெற்றது 'பாண்டியர் வரலாறு' என்னும் இந்நூலாகும். இது கடைச்சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி, கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் காலக்கட்டம் வரையில் பாண்டிநாட்டில் ஆட்சிபுரிந்த பாண்டிய மன்னர்களின் சரிதங்களைச் சுருக்கமாகக் கூறுவதாகும்.


இந்நூல் மூன்றாம் பதிப்பாக இப்பொழுது வெளியிடப்பெறுகின்றது. எனது ஆராய்ச்சியிற் புதியனவாகக் கண்ட கருத்துக்கள் பலவும் முன்னரே இடம்பெற்றுள்ளன. இதன் பிற்சேர்க்கைகளாக வேள்விக்குடிச் செப்பேடுகள், சின்னமனூர்ச் செப்பேடுகள் போன்றவற்றின் பகுதிகளும், மெய்க்கீர்த்திகளும் பாண்டியரைப் பற்றிய கல்வெட்டிற்கண்டபாடல்களும் சேர்க்கப்பெற்றுள்ளன. ஆராய்ச்சித்துறையில் கருத்து வேறுபாடுகள் நிகழ்தலும் புதியவைகள் கிடைக்கும் ஆதாரங்களால் சில செய்திகள் திருத்ததங்களுக்கு உள்ளாவதும் இயல்பாகும். இந்நூல் எழுதுவதற்குக் கருவிகளாக உள்ள தமிழ் நூல்களையும் கல்வெட்டுக்களையும் பிற நூல்களையும் முறையே வெளியிடுதவிய புலவர் பெருமக்களுக்கும் கல் வெட்டு இலாகா அறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்க்கும் எனது நன்றியுரியதாகும்.


இந்நூலை எழுதத் தூண்டி இதற்கு அணிந்துரையும் துதவிய கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவர், தமிழவேள் காலஞ்சென்ற இராவ்சாகிப் த.வே. உமாமகேசுவரம்பிள்ளை அவர்களது தமிழ்த்தொண்டு என்றும் நினைவுகூர் தற்குரியதாகும்.


சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களின் தமிழ்ப்பாடக்குழுவினர் இந்நூலைப் புலவர் தேர்விற்குரிய பாட நூல்களுள் ஒன்றாகத் தெரிந்தெடுத்துள்ளனர். அவர்கட்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இதனைக் கண்கவர் முறை அச்சிட்டுதவிய சென்னைச்சாது அச்சுக்கூட நிர்வாகி திரு.மு.நாராயணசாமி முதலியார் அவர்களுக்கும் 'புரூப்' திருத்தி உதவிய அரிய நண்பர், தமிழாராய்ச்சித் துறை விரிவுரையாளர் வெள்ளைவாரணரவர்கட்கும் எனது நன்றியுரியதாகும்.

இங்ஙனம்,


T. V. சதாசிவ பண்டாரத்தார்