பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10


முருகன் தலமும் ஆகும். பழமுதிர்சோலை என்றும் இது கூறப்படும்.


மதுரையிலிருந்து பஸ்மூலம் மாணிக்கவாசகர் பிறந்த திருத்தலமாகிய திருவாதவூரையும் கண்டு தரிசிக்கலாம். அங்கு வாதபுரீஸ்வரர் கோவிலும், வாதவூரார் கோவிலும் உண்டு. ஏரிக்கரையில் புருஷ மிருக சிலையையும் காணலாம்

தேவாரம்


முதல் திருமுறை 94-வது பதிகம்
பண் குறிஞ்சி

1.நீல மாமிடற் ருல வாயினுலள் பால தாயினுர் ஞாலம் ஆள்வரே


(அ. சொ.) மாமிடறு-பெரிய கழுத்து. ஆலவாயினுன். திருவாலவாயாகிய மதுரையில் உள்ள சோமசுந்தரப் பெருமான், பாலதாயினர்-இறைவன் பக்கம் சேர்ந்தவர், ஞாலம்-உலகு.


2. அடிகள். ஆலவாய்ப் படிகொள் சம்பந்தர் முடிவில் இன் தமிழ் செடிகள் நீக்குமே.


(அ. சொ.) அடிகள்-இறைவன், படிநல்ல முறைமை செடிகள்-நாம் செய்த வினைகளே.


இப் பதிகம் பதினேரு பாடல்களை உடையது. இதன் மூலம் திருஞானசம்பந்தர் நமக்குப் பல உபதேசங்களையும், உறுதிமொழிகளையும் கூறி அருளுகிருர்.


மக்களே! நீங்கள் இயமவாதனை அழிய வேண்டுமானால் மதுரைச் சொக்கேசனது குணவிசேடங்களையே சொல்லுங்கள், அவனது திருவடிகளைச் சிந்தனை செய்யுங்கள் அவனை வாயாரப்பாடி, மனமாரத் தேடி வாழுங்கள் என்பனவற்றை,