பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12

தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாய்உமை பங்கன்திரு வாலவா யான் திரு நீதே

(அ. சொ.) றுே-விபூதி, வானவர்-தேவர், சுந்தரம்அழகு. தந்திரம்-சிவாகமம், சமயத்தில்-ஆபத்தான காலத்தில் சைவிசமயமே அன்றி எல்லாச் சமயங்களிலும், செந்துவர்செம்மையான பவழம், பங்கன்-தன் உடம்பின் பாதில் உமையை வைத்திருப்பவர்.


2. முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருவாலவா யான்திரு நீறே.

(அ.சொ.) முத்தி-மோட்சம், தக்கோர்-பெரியோர்கள். பரவ-வாழ்த்த, சித்தி-நினைத்தவற்றை.

3. ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்னன் உடல்உற்ற தீப்பிணி ஆயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. (அ. சொ.) ஆற்றல் - வல்லமை, அடல் - கொலே, விடை - எருது, போற்றி - துதித்து, புகலி - சீர்காழி, பூசுரன் - மண்ணுலகத்தேவன், (அந்தணன்) தென்னன் - பாண்டியன், தீப்பிணி - சுரநோய், சாற்றிய கூறிய. திரு ஞானசம்பந்தர் மதுரையில் திருமடத்தில் தம் பரிவாரங்களுடன் தங்கி இருந்தார் இதனை அறிந்த சமணர் இவரைக் கொன்றுவிட மடத்திற்குத் தீ வைத்தனர். இதனை அறிந்த திருஞானசம்பந்தர் அத் தீ பாண்டிய மன்னனைப் பற்றுமாறு பதிகம் பாடினர். அவ்வாறே அது பாண்டியனைப் பற்ற அதனுல் துன்புற்ற பாண்டியன் திருஞானசம்பந்தரை வரவழைத்து அந்த நோயைத் தீர்க்க வேண்டினான். அதுபோது திருஞானசம்பந்தர் திருநீற்றைத் தடவி நோயைப் போக்கினர். அவ்வமயம் பாடப்பட்ட