பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

இத் திருநீற்றுப் பதிகத்தால் திருநீற்றுச் சிறப்பினைத் தொகுத்துக்கூறினால், மந்திரமாவதும், வானவர் திருமேனியில் உள்ளதும், அழகாவதும், போற்றப்படுவதும், ஆகமமாக இருப்பதும், எந்தச்சமயத்திலும், எல்லாச்சமயத்திலும் இருப்பதும், வேதத்தில் சிறப்பிக்கப்படுவதும், துன்பத்தை ஒழிப்பதும், ஞானத்தைத் தருவதும், அறியாமையாகிய சிறுமையை ஒழிப்பதும், வாயாரப்பேசப்படுவதும், சத்தியப் பொருளாய் இருப்பதும், மோட்சத்தைத் தருவதும், முனி வர்கள் அணிவதும், சத்தியமாவதும், பெரியோர்கள் புகழ்வதும், பத்திதருவதும், வாழ்த்தற்குரியதும், எண்வகைச் சித்திகளைத் தருவதும் பார்க்க இன்பமாய் இருப்பதும், அழகைத்தருவதும், போற்றி அணிபவர்க்குப் பெருமைகொடுப்பதும், அகாலமரணத்தை ஒழிப்பதும், அறிவைத்தருவதும், உயர்வைத்தருவதும், உடம்பில் பூசுதற்கு இன்பமாய் இருப்பதும், புண்ணியமாவதும், பேசப் பேச இனிமை தருவதும் தவசிகளின் ஆசையை ஒழிப்பதும், பேரின்பத்தின் முடிந்த பொருளாய் இருப்பதும், உலகம் எல்லாம் புகழ்வதும், செல்வமாய்த் துலங்குவதும், துன்பம் ஒழிப்பதும், சிவலோக இன்பம் தருவதும், அணிவதற்குப் பொருத்தமாய் இருப்பதும், புண்ணியர்கள் பூசிக்கொள்வதும், திரிபுரங்களைச் சுட்டதும், இம்மை மறுமைக்குப் பயனய் இருப்பதும், பயிற்சிக்கு உரியதாய் உள்ளதும் பாக்கியமாவதும், சோம், பலைக்கெடுப்பதும், தூய்மையாக்குவதும், இராவணன் அணிவதும், எப்போதும் சிந்தனைக்குரிய பொருளாய் இருப்பதும், பராசக்தி சொரூபமாக இருப்பதும், பாவத்தை ஒழிப்பதும், மெய்ப்பொருளாய் இருப்பதும், தேவர்கள் உடம்பில் திகழ்வதும், உடல் நோய் தீர்க்க வல்லதும் இன்பம் தருவதும், சமணசாக்கியர்கள் கண்டபோது அவர்க ளைத் திகைக்கும்படி செய்வதும், எண்ண எண்ண இனிமை தருவதும், எட்டுத்திசைகளிலும் உள்ளார்களும் போற்றும் தன்மையதும் ஆகிய திருருேகும் என்பதாம்.