பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

இத்திருநீற்றுப் பதிகத்தில் நாம் என்றும் நீனேவில் கொள்ளவேண்டிய அடிகள் "சமயத்தில் உள்ளது நீறு." "உண்மையில் உள்ளது நீறு,” “பேணி அணிபவர்க்கெல் லாம் பெருமை கொடுப்பது நீறு,' "ஆசைகெடுப்பது நீறு’ "மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு," "உடம்பு இடர்தீர்க்கும் இன்பதம் தருவது நீறு.' "எண்டிசைப்பொருளார் ஏத்தும் தகையது நீறு" என்பன.

இத்திருநீற்றுப் பதிகத்தால் திருவாலவாய்ச் சிறப்பை நன்கு உணரலாம். திருவாலவாய் நல்ல நெல் வயல்களே யுடையது என்பதும், அவ்வயல்கள் குளிர்ந்த நீர் வளத் தினேப் பெற்றது என்பதும், அழகுமிக்க மாளிகைகளே யுடையதும் போன்ற சிறப்புக்களே உணரலாம்.

இப்பதிகத்தின் ஈற்றுப்பாடல் இப்பதிகத்தை ஒது பவர் கல்லவர் ஆவர் என்பதையும், திருஞானசம்பந்தர் அந்தணர் மரபினர் என்பதையும் அறிவித்து கிற்கின்றது. பூசுரர் ஞானசம்பந்தன் என்னும் தொடரை கோக்குக.

மூன்ரும் திருமுறை பதிகம் 51 பண் கெளசிகம் 1. செய்ய னே திரு ஆலவாய் மேவிய

ஐய னே அஞ்சல் என்றருள் செய்எனப் பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் பைய வேசென்று பாண்டியற் காகவே. (அ. சொ.) செய்யனே-செம்மையான நிறமுடையவனே, அஞ்சல் - பயப்படாதே, அமணர் - சமணர், கொளுவும் - கொளுத்திய, பையவே - மெல்லவே, பாண்டியற்கு - கூன் பாண்டியனுக்கு. 2. தஞ்சம் என்றுன் சரண்புகுந் தேனையும்

அஞ்சல் என்றருள் ஆலவாய் அண்ணலே வஞ்சம் செய்தஅ மணர்கொளு வும்சுடர் பஞ்சவன் தென்னன் பாண்டியற் காகவே.