பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

னிக்கு ஒப்ப உரைபத்தும்" என்று கூறினர். காட்டின்

நன்மை தீமைகட்கு மன்னன் அன்ருே காரணன்?

திருஞானசம்பந்தர் வரலாற்று உண்மைக்கு அரண்

செய்யும் பதிகங்களில் இதுவும் ஒன்று.

மூன்ரும் திருமுறை பதிகம் 52 பண் கெளசிகம் 1. வீட்லால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்

பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே காடலால வாயிலாய் கவாலிநீன் கடிம்மதில் கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே. (அ. சொ.) வீடு + அலால் - மோட்சம் தவிர்த்து, அவாய்-ஆசை. விழுமியோர்கள்-மெய்ஞ்ஞானிகள், கழல்திருவடி, ஆல-கொண்டாட, பரவ-போற்ற, காடு-சுடுகாடு, கவாலி-மதிலின் பெயர், கடி-காவல். கூடல்-கான்மாடக் கூடல், (மதுரை) ஆலவாயில் - மதுரை, குலாயது - குலா வியது. 2. பட்டிசைந்த அல்குலாள் பாவையாள் ஓர்பாகமா

ஒட்டிசைந்த தன்றியும்.உச்சியாள் ஒருத்தியாக் கொட்டிசைந்த ஆடலாய் கூட்லால வாயிலாய் எட்டிசைந்த மூர்த்தியாய் இருந்தவாறி தென்னயே. (அ. சொ.) இசைந்த - பொருக்திய, பாவையாள். பார்வதிதேவியார், ஒட்டி - பொருந்தி, ஒருத்தி-கங்காதேவி, கொட்டு - மேளதாளங்கள், எட்டிசைந்தமூர்த்தி - மண், நீர், தீ, காற்று, ஆகாயம், சந்திரன், சூரியன், ஆன்மா ஆகிய எட்டு வடிவாகப் பொருந்திய மூர்த்தி. 3. குற்றம்நீ குணங்கள் நீ கூடல் ஆய வாயிலாய் சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ கற்றநூல் கருத்துநீ அருத்தம் இன்பம் என்றிசை முற்றும்நீ புகழ்ந்துமுன் உரைப்பதென் முகம்மனே.