பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

(அ. சொ.) பிரான் - தலைவன், இலங்கு - விளங்கும் அருத்தம்-பொருள். முகம்மன்-உபசாரமே. 4. கோலமாய நீள்மதில் கூடல் ஆல வாயிலாய்

பாலனுய தொண்டுசெய்து பண்டும் இன்றும் உன்னையே நீலமாய கண்டனே நின்னை அன்றி நித்தலும் சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே (அ.சொ.) கோலம்-அழகு, பண்டும்-முன்னும், சீலம்ஒழுக்கம். 5. போயநீர் வளம்கொளும் பொருபுனல் புகலியான்

பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினுல் ஆயசொல்லின் மாலைகொண் டாலவாய் அண்ணலைத் தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாய தேவரே. (அ.சொ.) போய-வயலுக்குப் பாய்ச்சிக் கொண்டது போக, பொரு-கரைமோதும், புனல்-நீர், புகலியான்-புகலி என்ற ஊரினன். புகலி என்பது சீர்காழிக்குரிய பெயர் களில் ஒன்று.

இப்பதிகம் இறைவன்முன் மனம் கசிந்து ஒதுதற்கு உகந்தது. இப்பதிகத்தின் இரண்டாவது பாடல் இறைவனே நோக்கி, இறைவ! பாகமோர் பெண்ணே வைத்தும், தலையில் ஒருத்தியையும் வைத்திருப்பதன் கருத்து என்னேயோ என்று வினவுவது இன் பச்சுவை தருவதாகும். திருஞான சம்பந்தர் தமது பாலப்பருவத்திலேயே பாடும் பணியை மேற்கொண்டவர்என்பதற்கு அவருடைய திருவாக்குகளே சாட்சியாக உள்ளன. அவற்றுள் ஒன்ருன இப்பதிகத்தில் பாலயை தொண்டு செய்து" என்று குறிப்பிட்டிருப் பதையும் உணர்வோமாக.

மதுரையம்பதி மதில் காவலையுடையதாய் அழகுடைய தாய் நீண்டதாய் இருந்தது என்பதும் அறிய வருகிறது. இறைவன் எல்லாமாயும் இருப்பவன், என்பதை மூன்ரும் பாடலாகிய குற்றம்நீ குணங்கள்.நீ என்று தொடங்கும்