பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

முன்ரும் திருமுறை பதிகம் 107

நாலடி மேல்வைப்பு

1. வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதம் இல்லி அமணுெடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு உள்ளமே பாதி மாதுடன் ஆய பரமனே

ஞாலம் நின் புக ழேமிக வேண்டும்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே (அ. சொ.) வேள்வி-யாகம், ஆதம்-அன்பு, அமண்சமணர், தேரர்-பெளத்தர், ஞாலம்-உலகம், உறையும். வாழும். 2. கூடல் ஆலவாய்க் கோன விடைகொண்டு ஆடல் மேனி அமணரை வாட்டிட மாடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப் பாடல் வல்லவர் பாக்கிய வான்களே

(அ. சொ.) கூடல்-என்பது ஊர்ப் பெயர். ஆலவாய் என்பது-கோயில்பெயர், கோன்-தலைவன், விடை-உத்தரவு, ஆடல்மேனி-உடல் பருத்திருக்கும் காரணத்தால் ஆடும் உடம்பு, மாடம்-மாளிகை, காழி-சீர்காழி.

மதுரையம்பதி சமணசமயம் பரவிச் சைவ சமயம் குன்றிக் காணப்பட்டது. அதுசமயம் சைவசமயத்தை நிலநிறுத்த திருஞானசம்பந்தர் மதுரையம்பதிக்கு வர வேற்கப்பட்டார். அவர் சமணர்களுடன் வாதம் செய்து சைவ சமயத்தை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு வந்து சேர்வே, சுந்தரேசப் பெருமானிடம் தம் கருத்து முற்றுப் பெறவேண்டி இப்பதிகத்தினேப் பாடியருளினர்.

சமணர்களோடு வாதம் செய்ய எண்ணிலர் திருஞான சம்பந்தர் என்பது இப் பதிகத்தில் காணப்படும் பாடல் களில் அக் காரணத்தைக் குறிப்பிடுவதினின்றும் உணரலாம்.