பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

குறிப்பிட்டுள்ளார். இப்பதிகம் பாடுபவர் பாக்கியவாளர் என்றும் அறிவிக்கின்ருர். திருஞானசம்பந்தர் வாழ்க்கை வரலாற்றுக்கு அகச்சான்ருய் நின்று துணைசெய்யும் பதிகங் களுள் இதுவும் ஒன்ருகும்.

இப்பதிகம் திருஇயமகம் என்ற திருப்பெயருடன் திகழ் கிறது. திருஇயமகம் என்பது மடக்கு என்னும் தமிழ்ப் பெயரால் இலக்கணத்தில் பேசப்படும். ஒரு சொல்லோ தொடரோ அப்படியே செய்யுளில் மடங்கிவர அமைவதே மடக்கு எனப்படும். இப்பதிகம் முழுமையும் இம்மடக்கு அமையப் பாடப்பட்டுள்ளது. இங்கு எடுத்துக் காட்டப் பட்டுள்ள இருபாடல்களிலும் இம்மடக்கு அமைந்திருப் பதைக் காணலாம். இருக்கையே என்பது இருமுறை மடங்கி இருப்பதைக் காண்க. இவ்வாறே பங்கனே, பூதனே என்ற சொற்கள் மடங்கி இருப்பதைக் காண்க. களத்தனே என்ற சொல்மட்டும் ஈற்றில் பிரித்துப் பொருள்படும் முறையில் ஆளப்பட்டுள்ளது. அண்டர்கள் அத்தனே என்று பிரித்துப் பொருள் காணவேண்டும்.

இவ்வாறே ஈற்றுப் பாடலிலும், விரகனே சம்பந்தன் என்ற சொற்கள் பிரிக்கவேண்டியின்றி இயற்கையில் அமைந்திருப்பதைக் காணலாம். ஆனல், மூன்ரும் அடியில் உள்ள வாயிலுளத்தனே என்பது முன்னர் வாயிலுள் அத்தனே என்றும், வாயில் உளத்தனே என்றும், நான் காம் அடியிலுள்ள பத்தும் என்னும் சொல், முன்னர் பத்தும் என்றே கின்று பின்னர் பற்றுமே என்று பொருள் படும் கிலேயில் அமைந்துள்ளது.

மூன்ரும் திருமுறை பதிகம் 113 திருஇயமகம் 1. ஆல நீழல் உகந்த திருக்கையே

ஆனபாடல் உகந்த திருக்கையே. பால னேர்மொழி யாள் ஒரு பங்கனே பாதம் ஓதலர் சோபுர பங்கனே