பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

கோல நீறணி மேதகு பூதனே

கோதி லார்மனம் மேவிய பூதனே ஆல நஞ்ச முதுண்ட் களத்தனே

ஆல வாயுறை அண்டர் களத்தனே. 2. ஈன ஞானிகள் தம்மொடு விரகனே

ஏறு பல்பொருள் முத்தமிழ் விரகனே ஆன காழியுள் ஞானசம் பந்தனே

ஆல வாயினின் மேயசம் பந்தனே ஆன வானவர் வாயிலு ளத்தனே

அன்பர் ஆனவர் வாயிலு ளத்தனே நானு ரைத்தன செந்தமிழ் பத்துமே

வல்ல வர்க்கிவை நற்றமிழ் பத்துமே.

1. (அ. சொ.) ஆலம்-கல்லால விருட்சம், உகந்தது இருக்கையே-உபதேசம் செய்வதற்கு உரிய இருப்பிடமாக இருக்க விரும்பியது, உகந்தது-விரும்பியது, இருக்கைரிக்வேதத்தை, சோ.மதில், புரம்-முப்புரங்களே, பங்கனே. அழித்தவனே, கோலம்-அழகு, மேதரு-மேன்மை பொருங் திய, பூதனே-துாய்மை ஆனவனே.

கோது-குற்றம், பூதனே-மண், நீர், தீ, காற்று, ஆகாய மாகிய ஐம்பூத வடிவாயுள்ளவனே, ஆலகஞ்சு-ஆலகால விஷம், அமுதுண்ட-அமுதம்போல உண்ட, களத்தனேகழுத்தை யுடையவனே, உறை-வாழும், அண்டர்கள்தேவர்கள், அத்தனே-தலைவனே.

2. விரகன்-தந்திரமாய் உள்ளவன், முத்தமிழ்-இயல் இசை நாடகத் தமிழ், விரகன்-வல்லவன், காழி-சீர்காழி, சம்பந்தனே-தொடர்புடையவனே, வானவர்-தேவர், உளத் தனே-மனத்தில் இருப்பவனே, பத்து-பற்று, அன்பாய் இருப்பது.

இப்பதிகம் ஞானசம்பந்தரது பேரறிவுப் புலமையை உணர்த்தும் பல பதிகங்களுள் ஒன்ருகும். இப்பதிகத்தில்