பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

சிறப்பாகக் குறிப்பிடப்பட்டவை, இறைவர் தம் திருவடி களைப் புகழ்ந்து ஒதாதவர்களே அழிப்பர் என்பதும், தம் மனம் கினைவார் பாரம் அறுப்பார் என்பதும், குற்ற மற்றவர் மனத்தில் பொருந்தியவர் என்பதும், தம்மாட்டு அன்பு இல்லாதவர்களே இழிவாகக் கருதுவர் என்பதும், பாண்டியன் மனைவியான மங்கையர்க்கரசியார்க்கும் தொண்டர்களுக்கும் அணியாய் இருப்பவர் என்பதும், திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு அருள் செய்தவர் என்ப தும், அன்பால் கினைப்பவருக்கு அருளும் மெய்யர் என்ப தும், இறைவர் முத்தமிழ் விரகர் என்பதும் அன்பர் உள்ளத்திலும் வானவர் வாயிலும் எப்போதும் இருப்பவர் என்பதும் தெரியவருகின்றன. "கின் அடித் தொழுநாளும் இருப்பனே' என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதி லிருந்து அவர் இறைவரை மறவாது போற்றி வந்த மாண்பு புலகிைன்றது.

மூன்ரும் திருமுறை பதிகம் 119

பண்-புறநீர்மை

1. மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை

வரிவளைக்கை மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி

பணிசெய்து நாள்தொறும் பரவப் பொங்கழல் உருவன் யூத நாயகன்

நால்வகைப் பொருள்கள் அருளி அங்கையற் கண்ணி தன்னுெடும் அமர்ந்த

ஆலவாய் ஆவதும் இதுவே. 2. வெற்றவே அடியார் அடிமிசை வீழும்

விருப்பினன் வெள்ளை நீறு அணியும் கொற்றவன் தனக்கு மந்திரி ஆய

குலச்சிறை குலாவி நின்றேத்தும்