பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன்

உலகினில் இயற்கையை ஒழிந்திட் டற்றவர்க் கற்றசிவன் உறைகின்ற

ஆலவா யாவதும் இதுவே. 3. பன்னலம் புணரும் பாண்டிமா தேவி

குலச்சிறை எனும் இவர் பணியும் அன்னலம் பெறுசீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கவைப் போற்றிக் கன்னலம் பெரிய காழியுள்

ஞானசம்பந்தன் செந்தமிழ் இசை கொண்டு இன்னலம் பாட்வல்லவர் இமையோர்

ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.

1. (அ. சொ.) மங்கையர்க்கரசி-கன்பாண்டியன் மனைவியார், வளவர்கோன்-சோழமன்னன், பாவை-பதுமை போன்ற பெண், பங்கயச்செல்வி-தாமரைமலரிலுள்ள இலக்குமி போன்றவள், பரவி-போற்றி, பூதநாயகன்உயிர்கட்குத் தலைவன், கால்வகைப் பொருள்கள்-மக்கள் பெறவேண்டிய அறம், ப்ொருள். இன்பம், வீடு ஆகிய உறுதிப்பொருள்கள், அங்கயற் கண்ணி-அழகிய கயல் போன்ற கண்களையுடையவள். கயற்கணி என்பதுவே மீட்ைசி என மொழி பெயர்த்துக் கொள்ளப்பட்டது.

2. (அ. சொ.) வெற்றவே-வெறுமனே, அதாவது சிறிதும் யோசனையே செய்யாமல், அடிமிசை-பாதங்களில், றுே-விபூதி, கொற்றவன்-மன்னனாகிய கூன்.பாண்டியன், குலச்சிறை-கூன்.பாண்டியன் மந்திரியார், குலாவி-மகிழ்ந்து, ஏத்தும்-போற்றும். விடை-இரவுபம், உம்பரார்-தேவர், அற்றவர்-எல்லாப்பற்றையும் விட்டவர்.

3. (அ. சொ.) புணரும்-சேரும், கன்னல்-கரும்பு’ காழி-சீர்காழி, இமையோர்-தேவர், துத்த-போற்ற.