பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

திருஞானசம்பந்தர் தம் பரிவாரங்களுடன் மதுரை யம்பதி வருகின்ற காலத்துத் தம்முன் மதுரை ஆலவாய்ப் பெருமான் ஆலயங்தோன்றக் கண்டு, இவ்வாலயம் மங்கை யர்க்கரசியாராலும், குலச்சிறையாராலும் வழிபடப்படும் தலமன்ருே என்று எண்ணிப் பாடப்பட்ட பதிகம் இது.

இப்பதிகத்தால் மங்கையர்க்கரசியார் குலச்சிறை காய ஞர் இயல்புகள் நன்கு சிறப்பித்துப் பேசப்பட்டுள்ளன. மங்கையர்க்கரசியார் சோழமன்னன் திருமகளார், இளமை மாருத மானி என்னும் திருப்பெயரினர். அழகில் இலக்குமி போன்றவர். கூன்.பாண்டியனுக்கு மனைவியாராக வாழ்க் கைப்பட்டவர். திருற்ேறை வளர்க்கும் குணமுடையார். பக்தி மிகுந்தவர் மற்றும் பல குணமும், வாய்க்கப் பெற்ற வர். பண்ணிசைபோன்ற மொழியினர். மார்பம் முத்துமாலே சந்தனக்குழம்பு விளங்க இருந்தவர். பவழம் போன்ற வாயும், சேல்மீன் போன்ற கண்ணும் பந்தாடுங் காலத்து அதனே அணைக்கும் திருக்கரமும், நல்ல அணிகலன்களே அணிந்தவர், அழகிய நெற்றியும் வாய்ந்தவர் என்பன போன்ற குறிப்புக்கள் இப்பதிகத்தால் அறியவருகின்றன.

குலச்சிறையார் அடியார்களைக் கண்டதும் உடனே அவர்கள் திருவடிகளில் விழும் விருப்பமுடையவர். கூன் பாண்டியனுக்கு மந்திரியார். சிவனடியாராக வருபவர் தனித் தேனும், கூட்டமாகவேனும் வரக்கண்டதும், அவர்களேப் பணியும் பணிவுடையவர். அடியவராக இருப்பவர் கலமுடை யவராயினும் சரி, இல்லாதவராயினும் சரி, குலமேம்பாடு உடையவராகவோ, இல்லாதவராகவோ, இருப்பினும் சரி, அவர்களேயே தம் தவப்பேருகக் கருதி வணங்குபவர். பஞ் சாட்சர மந்திரங்களே ஒதியும் நல்லவராயும் கல் இயல்புரிமை யுடையவராயும்,கோவணம் திருநீறு,கண்டிகையோடுகூடிய தோற்ற முடையவராயுமுள்ளாரைக் கண்டதும் கீழே விழுந்து வணங்கி எழும் சிறப்புடையவர். தொண்டர்கள் வாழ்திசைகள் தோறும் வணங்கும் குணமுடையவர்.