பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

கலங்க வேண்டும் என்பதே இவர் "செண்டடித்து உழற' என்பதால் உணரலாம்.

சமணர்கள் கல்வியில் மிகுந்தவர். ஆனல், அக்கல்விக் கேற்ப கடவாமல் இருந்தமையின் அவர்கள் திய ஒழுக்கம் மேற்கொண்டனர். ஆகவே, அவ்வொழுக்கம் அவர்கள் பால் இல்லாமல் இருக்கத் திருவுள்ளம் கொண்டே “கற்பு (ஒழுக்கம்) அழிக்க" என்று கூறி அருளினர். ஈண்டு கற்பு அவர் தம் தீய ஒழுக்கமாம். தம் ஒழுக்கம் கெட்டு அமணர் ஒழுகினர் என்பதை இப்பதிகத்திலேயே, "கழிக் கரைப் படுமீன் கவர்வார் அமண்' என்ற அடியே அறி வித்து கிற்கின்றது. மேலும், அவர்கள் தவவேடம் பூண்டும் அத்தவத்திற்கு ஏற்ப ஒழுகாதவராயும் இருந்தனர் என்பதை "பொய்த்த வேடத்தராம் அமண சித்தர்' என்று இவர்கள் கூறப்பட்டிருக்கின்றனர். மேலும் தம் பணியிலும் தவறிய வர் என்பது "பணிபொய்த்த” என்ற தொடரும் சான்ருய் கின்று சாற்றும் இப்பதிகத்தால் சமணர்கள் யாகம் செய்யா தவர்கள் என்பதும், சமணர்கள் பேய் எண்ணம் படைத் தவர் என்பதும், வேதம் அறியாதவர் என்பதும் இலையிலோ கலத்திலோ வைத்து உணவு கொள்ளர்மல், கையில் பிறர் பிசைந்து வைக்க உண்ணும் குணத்தினர் என்பதும், வஞ்சகர் என்பதும் நல்ல உடல் பருமனுடையவர் என் பதும், அப்பருமல்ை வீறு (சிறப்பு) குறைந்து காணப்படு பவர் என்பதும், அவர்கள் தோற்றம் வேடர்கள் போல இருந்தது என்பதும் பாவர் என்பதும் வீணர் என்பதும் மேலே வீடு (மோட்சம்) உணராதவர் என்பதும், பிறரை அழிப்பவர் (தம் திருமடத்தில் தீ வைத்த காரணத்தால் இவ்வாறு கூறப்பட்டனர் போலும்) என்பதும், சித்தில் வல்லவர் என்பதும் மழுங்கா முடியினர் என்பதும் அறிய வருகின்றன.

சாக்கியர்கள் (பெளத்தர்கள்) பெரிதும் செம்மையான திருமேனியுடையவர்கள். மழுங்க முடி களைந்து மழமழ