பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

முன்ரும் திருமுறை பதிகம் 47 மானின் நேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெரும் தேவிகேள் பானல் வாய்ஒரு பாலன் ஈங்கிவன் என்று நீபரி வெய்திடேல் ஆனை மாமலை ஆதிஆய இடங்களில்பல அல்லல்சேர் ஈனர் கட்கெளி யேன்.அ லேன்திரு வால வாய் அரன் நிற்கவே.

(அ.சொ.) நேர்-ஒப்பான, வழுதிக்கு-கூன்.பாண்டிய னுக்கு, மாபெருக்தேவி-சிறந்த பெரிய மனையாட்டியே, பானல்-செங்குவளைமலர், பரிவு-இரக்கம், ஆனேமாமலைஆனைமலை, இது மதுரையில் உள்ளது, அல்லல்-துன்பம், ஈனர்-இழிந்தவர்களான சமணர். எக்க ராம்அமண் கைய ருக்கெளி யேன்.அ லேன்திரு வாலவாய் சொக்கன் என்னுள் இருக்கவேதுளங்கும்முடித் தென்னன் முன் தக்க சீர்புகலிக்கு மன்தமிழ் நாதன் ஞானசம் பந்தன்வாய்(இவை ஒக்க வேஉரை செய்த பத்தும் உரைப்ப வர்க்கிடர் இல்லையே.

(அ. சொ.) எக்கர்-இறுமாப்புடையவர், கையர்-வஞ் சகர், சொக்கன்-சுந்தரேசப் பெருமான், துளங்கும்விளங் கும், தென்னன்-கூண்பான்டியர், புகலிக்குமன்-சீர்காழித் தலைவர், இடர்-துன்பம்.

திருஞானசம்பந்தர் கூன்.பாண்டியன் உற்ற சுர நோயைத் தீர்க்கும் பொருட்டுப் பாண்டியன் சபைக்கு அழைக்கப்பட்டனர். அச்சபையில் சமணர்களும் கூடி இருந்தனர். அவர்கள் உடற்கட்டு வாய்ந்தவர்களாய் இருக்க ஞானசம்பந்தர் பால்யத் தோறறத்தோடு இருப்பதைக் கண்டு, இவருக்குச் சமணர்களால் என்ன திங்குவிளையுமோ என்ற ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த மங்கையர்க் கரசியாருடைய உள்ளத்தை அறிந்த திருஞானசம்பந்தர் இப்பதிகத்தைப் பாடத் தொடங்கினர்.

மங்கையர்க்காசியார் மருண்டு மருண்டு பார்த்திருந்த காரணத்தால்தான் 'மானினேர் விழி மாதராய்' என்று விளித்துப் பாடினர். தாம் சிறுவர் ஆயிற்றே சமணர்