பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

என்ன செய்து விடுவரோ என்று எண்ணிக் கொண்டிருக் தார் மங்கையர்க்கரசியார் என்பதையும் உணர்ந்து, 'பானல் வாய் ஒரு பாலன் சங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்' என்றும் குறிப்பிட்டுப் பாடினர். இவ்வடி திருஞானசம் பந்தர் சிறு பிள்ளை என்பதற்கு ஒர் அகச்சான்ருகும். அவர் வரலாற்றிற்கு ஆணித்தரமான அகச்சான்றும் ஆகும். இப்பதிகம் பாண்டியன் சபையில் அவன்முன் பாடப்பட்டது என்பதும் இப்பதிக ஈற்றுப் பாடல் "தென் னன்முன் இவை ஞானசம்பந்தன் வாய் ஒக்கவே உரை செய்த' என்று கூறி அறிவிக்கின்றது.

திருஞானசம்பந்தர்க்குச் சுந்தரேசப் பெருமான் திரு வருள் முற்றிலும் இருந்தமையால், தாம் சமணர்கட்குச் சிறிதும் சளேத்தவர் அல்லர் என்பதைப் பாடல் தோறும் "எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே” என்று கூறுவதால் தெரிகிறது.

இப்பதிகத்தால் சமணர்கள் மதுரை ஆனைமலை முத லான இடங்களில் துன்பம் அடைந்துள்ளனர் என்பதும், ஆரியர் மொழியின் பயனும் செந்தமிழ் மொழியின் பயனும் அறியாதவர்கள் என்பதும், அறத்தைக் காட்டிச் செல்வம் கவர்பவர் என்பதும், மயிற்பீலி, பாய் இவற்றை இடுக்கிக் கொண்டும் தள்ளாடிக்கொண்டும் பிறர் பின் செல்பவர் என்பதும், தலைமயிரைப் பறிப்பவர் என்பதும் போன்ற குறிப்புக்கள் தெரியவருகின்றன.

சமணர்கள் சந்து சேனன், இந்து சேனன், தரும சேனன், கந்து சேனன், கனக சேனன், கனக கந்தி, புட்ப கந்தி, பவண நந்தி, ಅLDಣರ நந்தி, மா கந்தி, சுகன நந்தி, குகை கந்தி, திவண நந்தி, அங்க கந்தி முதலான பெயருடன் விளங்கி இருந்தனர்.

சமணர்கள் அக்காலத்தில் வைதீக சமயங்கட்குப் பல விதத்தில் இடையூருக இருந்தனர் போலும் அதனைத்