பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

நூலாய் சருகிலப் பந்தர்செய்த சிலந்தியை அரசு அது ஆள அருளினய்" என்று குறிப்பிட்டனர். இம்மன்னனே கோச் செங்கட் சோழனவான். இராவணனுக்கு அருள்செய்தது சற்றுப் பாடலில் குறிப்பிட்டது.

ஆரும் திருமுறை பதிகம் 19 திருத்தாண்டகம் 1. முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி

முதிரும்சபை முடிமேல் முகிழ்வெண் திங்கள் வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும் வார்சிலையா வாசுகி மாணு கோத்துத் துளைத்தானைச் சுடுகரத்தால் துவள நீருத்

துரமுத்த வெண்முறுவல் உமையோ ட்ாடித் திளைத்தானைத் தென்கூடல் திருவால வாய்ச்

சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

(அ. சொ.) முகிழ்-அரும்பும், திங்கள்-சந்திரன், புரங் கள்-கோட்டைகள், வரை-மேருமலையை, சிலையா-வில்லா கக்கொண்டு, வாசுகி-வாசுகி என்னும் பாம்பை, மாபெரிய, காணு-கயிருக, சுடுகரத்தால்-சுடும் அம்பால், துவள-வருந்த ருே-சாம்பராகப் போகும்படி, துர-சுத்த மான, முறுவல்-பற்கள், உமை-பார்வதிதேவி.

2. வாயா?ன மனத்தானை மனத்துள் நின்ற

கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்

தூயானைத் தூவெள்ளை ஏற்ருன் தன்னைத்

சுடர்த்திங்கள் சட்ையானைத் தொடர்ந்து நின்றுஎன்

தாயானைத் தவமாய தன்மை யானைத்

தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்

சேயானைத் தென்கூடல் திருவால வாய்ச்

சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் தானே.