பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




பதிப்புரை

தென் பாண்டி நாடு, சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கிய பிரதேசம். சமயாச் சாரியார்கள் ஊருராகச் சென்று தமிழையும் சைவத்தையும் பரப்பிப் பண்பை வளர்த்த பகுதி.


சமய குரவர்கள் கால்வராலும் பாடப் பெற்ற பாண்டித் தலங்கள் பதிநான்கினைப் பற்றிய வரலாறும், அவ்வத் தலங்களில் பாடப் பெற்ற பதிகங்களும், அத் தலங்க ளுக்குச் செல்வதற்குரிய மார்க்கம் முதலி யனவும் இந்நூலில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன.

தலயாத்திரை செய்ய விரும்புவோருக்கும், தல வரலாற்றினை அறிந்து கொள்ள விரும்புவோர்க்கும் மிகுதும் பயன் படும்.

தமிழ் மக்கள் இதனை விரும்பி வரவேற்பார்களென நம்புகிறோம்.

ஸ்டார் பிரசுரம்