பக்கம்:பாண்டிய நாட்டுக் கோவில்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இருந்த நட்புரிமை "அடியேனுக்கு அன்பன் தன்னை" என்று அப்பரே குறிப்பிடுவதால் அறியலாம்.

இப்பதிகத்தில் திருப்பழனத்தலமும் குறிக்கப்பட்டுள் ளது. அத்தலம், அலங்காரம் நிலவும் சோலைகளேயுடையது என்றும் சுட்டப்பட்டுள்ளது. இறைவன் கங்கையை மறைத்து உமையோடு திளேக்கிருர் என்பதை நகைச்சுவை அமைய, "கங்கையாளேக் கரந்து உமையோடு உடனகி இருந்தான் தன்னை” என்று கூறி விளக்குகிருர். "இறை வியின் வடிவம் எழுத ஒண்ணு வடிவம் என்பது” 'படி எழுதலாகாத மங்கை' என்பதால் விளங்குகிறது; துறக் தார்க்குத்து நெறியாய் இருப்பவன் இறைவனே என்பதை யும் ஈண்டே அறியலாம்.

2. திருவாப்பனுர் இது பாண்டிய காட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் இரண்டாவது. இக்காலத்தில் இது திரு ஆப்புடையார் கோயில் எனக் கூறப்படுகிறது. இத்தலத்துப் பெருமான் சோழாந்தகன் என்னும் பாண்டியன் மீது வைத்த அன்பின் கார்ணத்தால் ஆப்பில் தோன்றிக் காட்சி அளித்தனர். இதல்ை இறைவர் திருவாப்புடையார் எனப்ப்ட்டார். ஈண்டு நடராஜர் சிவகாமி அம்மையார் திருவுருவங்கள் செம்பிலுைம், கல்லாலும் செய்து அமைக்கப்பட்டிருப்பது கண்டு இன்புறுதற்குரியவை ஆகும்

ஈண்டுள ஈசர் ஆப்பனூர்க் காரணர் என்றும் ஆப்பனூ ரிசுரர் என்றும், திருவாப்புடையார் என்றும், இறைவியார் அம்பிகை அம்மையார், குரவங்கமழ் குழல் அம்மையார் என்றும் கூறப்படுவர். ஈண்டு உள்ள தீர்த்தம் இடப தீர்த்தமாகும்.

1. இத்தலம் மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வட கிழக்கே ஒரு மைல் தொலைவில் வைகை ஆற்றுக்கு வட கரையில் அமைந்துள்ளது. இத்தலத்திற்குத் திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது.